×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நாங்களும் தவெக- வுக்கு எதிரி தான்! கூட்டணி குறித்து எடப்பாடி சொன்ன அந்த ஒரு வார்த்தை.... அப்போ ஒன்றுகூடி ஒரு அணியிலா? இது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டா இருக்கே...!!!

தமிழக வெற்றிக் கழகத்தை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணையுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

Advertisement

தமிழக அரசியல் களம் புதிய கூட்டணி கணக்குகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

திமுக ஏற்கனவே இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், அதிமுகவும் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. இதற்கிடையே, தவெக எதிர்ப்பு கூட்டணி உருவாகுமா என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளது.

இதையும் படிங்க: இடைத்தேர்தலில் எம். எல்.ஏக்கள் மூலம் விஜய் வைக்கப்போகும் செக்! திமுக, அதிமுக நிலை என்ன? வெளியான ரகசிய தகவல்...!!!

கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்போம் என கூறிய எடப்பாடி 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், தவெகவுக்கு எதிரான கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நாங்களும் தவெகவுக்கு எதிராகத்தான் இருக்கிறோம். வேறு எந்தக் கட்சி வந்தாலும் வரவேற்போம்” என்றார்.

திமுகவும் இந்த அணியில் இணையுமா என கேட்கப்பட்டபோது, “புதிதாக சில கட்சிகள் இணையலாம். திமுக வருமா என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திமுகவை நேரடியாக நிராகரிக்காத இந்த பதில் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மதுராந்தகம், தாராபுரத்தில் களம் சூடுபிடிப்பு

இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதிக்கு எஸ். பரந்தாமனும், தாராபுரம் தொகுதிக்கு எஸ். சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மறுபுறம் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

நீண்டகாலமாக கூட்டணியில் இருந்த திமுக - காங்கிரஸ் உறவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், காங்கிரஸ் தவெக பக்கம் சென்றிருப்பதும், அதிமுகவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் தவெக அணியை நோக்கி நகர்ந்திருப்பதாக வெளியாகும் தகவல்களும் அரசியல் சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளன.

புதிய கூட்டணி கணக்குகளுக்கு வழிவகுக்குமா?

விஜய் தலைமையிலான ஆட்சியை ஊழல், விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்களில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், இடைத்தேர்தல் களத்தில் தவெகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரளுமா என்பது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை தீர்மானிக்கக்கூடியதாக மாறியுள்ளது.

குறிப்பாக அதிமுக - திமுக போன்ற அரசியல் எதிரெதிர் அணிகள் ஒரே புள்ளியில் இணைவதற்கான வாய்ப்பு குறித்து தற்போது விவாதம் எழுந்துள்ளது. ஆனால், கூட்டணி தொடர்பான இறுதி முடிவுகள் இன்னும் தெளிவாகாத நிலையில், அடுத்தடுத்த அறிவிப்புகள் மீது அரசியல் கட்சிகளின் கவனம் திரும்பியுள்ளது.

 

இதையும் படிங்க: ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுக கோட்டையில் தவெக சந்திக்கும் முதல் சவால்! தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தவெக #Edappadi Palaniswami #அதிமுக #திமுக #இடைத்தேர்தல்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story