×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தப்பிதவறிக்கூட வீட்டின் தலைவாசலில் இதை எல்லாம் செய்யாதீர்கள்! மிகவும் துரதிஷ்டமாம்!

Why we should not stand in house entrance

Advertisement

நாம் வாழும் வீடானது வாஸ்து சாஸ்திரத்தின் படி அமைக்கப்பட்ட மிக முக்கியமான ஒன்றாகும். மேலும்,  நம் வீடு என்பது பஞ்ச பூதங்கள் குடிக்கொண்டிருக்கும் ஒரு ஆலயம். வீட்டை விட்டு எங்கு சென்றாலும் மீண்டும் வீட்டிற்குள் வரும்போதுதான் நிம்மதி பெருமூச்சு விடுகிறோம்.

வீட்டுக்கு மிக முக்கியமானது தலைவாசல் மற்றும் கதவு. பண்டையகாலத்தில் தலைவாசலானது உயரம் அதிகம் இல்லாமல் அனைவரும் குனிந்து செழும்படிதான் அமைக்கப்பட்டிருக்கும். அதற்கு காரணம் தலைவாசலில் மகா லட்சுமியும், அஷ்ட லட்சுமிகளும் குடிக்கொண்டிருக்கிறார்கள். கும்ப தேவதைகள் இரு பக்கங்களிலும் அமர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இவர்களுக்குள் மரியாதையை செலுத்தவே தலை குனிந்து செல்லுமாறு வாசல் அமைக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக தலைவாசலை கடக்கும்போது அதை மிதிக்காமல் செல்வது மிக நல்லது. தலை வாசலில் உட்காருவது, ஒற்றை காலில் நிற்பது, தலை வைத்து படுப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை தேடித்தரும்.

அதேபோல தினமும் முடிந்தவரையில் காலையில் தலை வாசற்படியில் மஞ்சள் கரைத்த நீரை தெளித்துவிடவேண்டும். இது தீய கிருமிகள் வீட்டிற்குள் நுழைவதை தடுக்க உதவும். மேலும், வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்குள் நுழையும்போது கை, கால்களை நன்கு கழுவிவிட்டு வீட்டிற்குள் செல்வது நல்லது.

கிரக லட்சுமி வாசம் செய்யும் இடம் வாசற்படி என்பதால் வாசற்படியில் நின்று தும்முவது, மற்றவர்களுடன் கதை பேசுவது போன்ற செயல்களை செய்யாதிருத்தல் வேண்டும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Health tips in tamil #health tips
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story