×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கோடையில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்.. இதையெல்லாம் தப்பித்தவறியும் சாப்பிடாதீங்க.!

Health Tips: பூண்டு, இஞ்சி உட்பட பல உணவுகளை கோடைகாலத்தில் தவிர்க்க வேண்டும்.

Advertisement

sSummer Health Tips: உடலுக்கு நன்மை தரும் வெள்ளரிக்காய், முலாம்பழம் ஆகியவற்றை கோடையில் அதிகம் சாப்பிட வேண்டும்.

கோடைகாலத்தில் நாம் நமது உடலை சரியாக பராமரிக்க வேண்டும். கோடையின் வெப்ப தாக்கத்திலிருந்து உடலை குளிர்விப்பதற்காக மோர், தர்பூசணி, வெள்ளரி ஆகியவற்றை சாப்பிடலாம். அதிக வெப்பம் இருக்கும்போது ஒரு சில உணவுகளை சாப்பிட்டால் கட்டாயம் அது நீர் இழப்பு மற்றும் செரிமான குறைபாடு போன்ற விஷயங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் கோடை காலத்தில் நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து தற்போது நாம் தற்போது காணலாம். 

இஞ்சி & பூண்டு:

இஞ்சி, பூண்டில் இருக்கும் அலீசின், ஜிஞ்சரால் சேர்மங்கள் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். இதனால் வயிறு எரிச்சல், நீர் இழப்பு போன்றவை ஏற்படும். மருத்துவ குணங்கள் ஏராளமான இஞ்சி, பூண்டை கோடையில் அளவுடன் பயன்படுத்துவது நல்லது.

இதையும் படிங்க: Green Banana: பச்சை வாழைப்பழம் கேட்டு வாங்கி சாப்பிடுங்க.. என்னென்ன நன்மைகள்? தெரிஞ்சிக்கோங்க..!

 

மிளகாய் வகைகள்:

பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் உடல் வெப்பத்தை அதிகரிக்கும். மிளகாயில் பொதுவாகவே கேப்ஸ்யைசின் உள்ளது. இது செரிமான பாதையில் எரிச்சலை ஏற்படுத்தி நெஞ்சு எரிச்சல், வயிறு எரிச்சல் உண்டாகும். 

கீரைகள்:

கீரையில் இருக்கும் அதிகப்படியான சத்து சிறுநீரகத்துக்கு கோடைகாலத்தில் கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும். ஆக்சலேட் கோடைகாலத்தில் நல்லது கிடையாது. கடுகு கீரையும் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் என்பதால் இதனை தவிர்க்கலாம். சுரைக்காய், புடலங்காய் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். 

வெங்காயம்: 

வெங்காயத்தில் இருக்கும் கந்தக சேர்மம் வயிறு உப்பசம், வாயுத்தொல்லை, நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும். வெங்காயம் குளிர்ச்சி என்றாலும் கோடையில் அளவுடன் அதனை பயன்படுத்த வேண்டும். 

காய்கறிகளில் கவனம்:

மாவுச்சத்து அதிகம் கொண்ட உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம், பட்டாணி, கருணைக்கிழங்கு, வாழைக்காய் ஆகியவை ஜீரணமாக அதிக நேரம் ஆகும். இதனால் வயிற்று உப்பிசம், சோர்வு ஏற்படலாம். கேரட், முள்ளங்கி குளிர்கால பயிர்களாக கருதப்படும். இது செரிமானமாக அதிக நீர் தேவைப்படும். அதனால் இவ்வகை உணவுகளை கோடைகாலத்தில் தவிர்ப்பது நல்லது. 

நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய், முலாம்பழம், சுரைக்காய், தர்பூசணி, இளநீர், மோர் போன்றவற்றை அதிகளவு எடுத்துக் கொள்வது கோடைகாலத்தில் உடலுக்கு நல்லது.

இதையும் படிங்க: தனியா சாப்பிடும் பழக்கம்.. நம்ம உயிரையே எடுக்கும்னு சொன்னா., நம்ப முடியுதா.?!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#health tips #summer tips #கோடைகாலம் #உணவுகள் #உடல்நலம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story