×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிக நேரம் ஹெட்போன் பயன்படுத்துபவரா நீங்கள்? இதை படிச்சா இனி பயன்படுத்த மாட்டீங்க!

Problems of using headphone in tamil

Advertisement

இன்று நம்மில் பலருக்கும் இருக்கும் பழக்கங்களில் ஓன்று ஹெட்போன் பயன்படுத்துவது. பயணம் செய்யும்போது, உடற்பயிற்சி செய்யும்போது, வாகனங்கள் ஓட்டும்போது இப்படி பல்வேறு நேரங்களில் ஹெட்போன் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றோம். மேலும், தொலைபேசியின் கதிர் வீச்சில் இருந்து தப்பிக்க தொலைபேசி பேசும்போது ஹெட்செட் பயன்படுத்துகிறோம்.

இப்படி அதிகமாக ஹெட்போன் பயன்படுத்துவது சரியா? இதனால் எண்ணலாம் பிரச்சனை வரும்? வாங்க பாக்கலாம்.

1 . காதுக்குள் இரைச்சல்
அதிகநேரம் ஹெட் போனில் பாட்டு கேட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கு கேட்கும் திறனில் குறைபாடு ஏற்பட்ட அதிக வாய்ப்புள்ளதாம். மேலும், அதிகமாக ஹெட்போன் பயன்படுத்துபவர்களுக்கு ‘சென்ஸரி நியூரல் லாஸ்‘ எனப்படும் பாதிப்பு ஏற்பட்டு இதனால் காதுக்குள் இரைச்சல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்குமாம். 

2 . தலைவலி
தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற வியாதிகள் வர அதிக நேரம் ஹெட்போன் பயன்படுத்துவதும் ஒரு காரணமாம். 

3 . விபத்து
வண்டி ஓட்டும்போது ஹெட்போன் பயன்படுத்துவதால் அதிகமாக விபத்துகள் நடப்பதாக சமீபத்திய ஆய்வு ஓன்று கூறுகிறது.

4 . காது அழுக்குகள்
அதிக நேரம் ஹெட்போன் பயன்படுத்துவதால் காதில் இருந்து வெளியேறும் அழுக்குகள் சரியாக வெளியேறாமல் காதிலையே தங்கி, சீல், காது அறிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் இசை அதிர்வினால் செவி மடலும் பாதிப்படைந்து காரணமே இல்லாமல் காது  வலி ஏற்படும். 

5 . கேட்கும் திறன்
அதிக ஹெட்போன் பயன்பாட்டினால் இளம் வயதில்லையே கேட்கும் திறன் பாதிக்கப்பட்டு காது நன்றாக  கேட்பதற்கான மெஷின்களை இளம் வயதிலேயே பயன்படுத்த நேரிடும்.

6 .  ஞாபக சக்தி குறையும்
அதிகம் ஹெட்போன் கேட்பதால் சிந்திக்கும் திறன், ஞாபக சக்தி குறையுமாம். மேலும், ஹெட்போனுக்கு அடிமையானவர்களுக்கு ‘ஆடிட்டரி ஹாலுசினேஷன்‘ என்ற மனநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#health tips #Health tips in tamil #Headphone usage
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story