×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சீசன் டைமில் மிஸ் பண்ணாதீங்க.. பன்னீர் கொய்யாவின் சூப்பர் நன்மைகள்.!

Water Apple Benefits: மினி ஆப்பிள் போல தோற்றம் தரும் பன்னீர் கொய்யா ஆரோக்கியத்தில் பல நன்மைகளை வழங்கும். 

Advertisement

பெல் ஆப்பிள் என அழைக்கப்படும் அரிய பழம் தரும் நன்மைகள் ஏராளம்.

மலைப்பிரதேசத்தில் விளையும்:

நெல்லிக்காய் வகைகளில் பலருக்குத் தெரியாத ஒரு முக்கியமான வகை பன்னீர் நெல்லிக்காய். மினி ஆப்பிள் போன்ற தோற்றத்துடன் காட்சியளிக்கும் இந்தப் பழம், உலகின் பல பகுதிகளில் பெல் ஆப்பிள், வேக்ஸ் ஆப்பிள், ஜாவா ஆப்பிள், ரோஸ் ஆப்பிள், லவ் ஆப்பிள், வாட்டர் ஆப்பிள் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது பில்லாந்தேசி (Phyllanthaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. கரும்பழுப்பு நிற விதைகள் கொண்ட இந்தப் பழம், தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைப் பிரதேசங்களில் அதிகமாக விளைகிறது.

இதையும் படிங்க: அன்னாசி பழத்தில் எக்கச்சக்கமாக கொட்டிக்கிடக்கும் பல நன்மைகள்! அவசியம் தெரிஞ்சுக்கோங்க...

சத்துக்கள் நிறைந்தது:

சீசன் காலங்களில் அதிகம் கிடைக்கும் இவ்வகை பழங்கள், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல முக்கிய ஊட்டச்சத்துகள் கொண்டது ஆகும். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் A, B1, C, E, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் மற்றும் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்சிடென்டுகள் அதிக அளவில் உள்ளன. இவை உடலின் செல்களை பாதுகாக்கவும், வளர்சிதை மாற்றத்தை சீராக வைத்திருக்கவும் உதவுகின்றன.

உடலுக்கு நல்லது:

பன்னீர் நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் பல உடல்நல நன்மைகள் கிடைக்கின்றன. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழமாக கருதப்படுகிறது. மேலும், கண் பார்வையை மேம்படுத்த, சளி மற்றும் இருமலை குறைக்க, முடி வளர்ச்சியை ஊக்குவிக்க, கெட்ட கொழுப்பை (LDL) குறைக்க மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்தப் பழம் உதவுகிறது. உடல் எடையை கட்டுப்படுத்த, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, உடல் ஆரோக்கியத்தை உயர்த்த பன்னீர் கொய்யா உதவுகிறது.

இதையும் படிங்க: Health Tips: உருளைக்கிழங்கு தோல்களை சீவிடுவீங்களா? இது தெரிஞ்சா இனிமே பண்ணமாட்டிங்க.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#health tips #Water Apple #பன்னீர் கொய்யா #பெல் ஆப்பிள் #Water Apple Benefits:
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story