நீண்ட தூரம் பயணம் செய்யும்போது வாந்தியால் அவதி படுறீங்களா? இதோ ஈஸியான டிப்ஸ்.
How to avoid vomiting in travel time in tamil

நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் ஓன்று நீண்ட தூரம் பயணம் செய்யும்போது வாந்தி எடுப்பது. இதனால் சிலர் பயணம் செய்வதையே வெறுக்கின்றனர். இப்படி நீண்ட தூரம் பயணம் செய்யும்போது வரும் வாந்தியை எப்படி தடுப்பது? ஏதேனும் வீட்டு மருத்துவம் இருக்கா? வாங்க பாக்கலாம்.
1 . சோம்பு:
சோம்பு பலவிதங்களில் நமக்கு பயன்படுகிறது. பயணத்தின்போது வரும் வாந்தியை தடுக்கவும் சோம்பு பயன்படுகிறது. பயணத்தின் போது அவ்வப்போது சோம்பை சிறிது வாயில் போட்டு மென்றுவந்தால் வாந்தி வருவது தடுக்கப்படும்.
2 . எலுமிச்சை:
எலுமிச்சையில் உள்ள மினரல்ஸ் வாந்தி வருவதை உடனடியாக தடுக்கும். இதனால் ஒரு எலுமிச்சம் பழத்தை சிறிது நீரில் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
3 . சர்க்கரை மற்றும் உப்பு:
சர்க்கரை மற்றும் உப்பை சிறிது நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் வறட்சி அடையாமலும், வாந்தி வராமலும் பார்த்துக்கொள்ளும்.
4 . கிராம்பு:
ஒரு கிராம்பு துண்டை வாயில் போட்டு மென்றுவந்தால் கிராம்பின் வாசனையும், அதன் சுவையும் வாந்தி வருவதை உடனே தடுக்கும்.
5 . இன்ஜி:
பயணம் செய்யும் நேரங்களில் சிறிதளவு இஞ்சியை நீரில் போட்டு அதனுடன் தேன் கலந்து பயணம் செய்யும் நாட்களில் குடித்துவருவதன் மூலம் இந்த பிரச்சனையை எளிதில் சரி செய்யலாம்.