இரவு உணவு பழக்கம் இப்படித்தான் இருக்க வேண்டும்.. சூப்பர் டிப்ஸ் இதோ.!
இரவு 6.30-7 மணிக்குள் உணவு முடிப்பது நல்லது. பசி எடுத்தால் பழங்களை தேர்வு செய்யலாம்.
இரவு உணவை எப்போது சாப்பிட வேண்டும்? சர்க்கரை நோயாளிகள் இரவில் என்ன சாப்பிடலாம், எதை தவிர்க்க வேண்டும்? என்பது குறித்து மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
சரியான நேரம்:
உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக தினமும் மூன்று வேளைகளிலும் சரிவிகிதமான உணவை எடுத்துக்கொள்வது அவசியம். இரவு உணவை மிகவும் தாமதமாக சாப்பிடுவதற்குப் பதிலாக மாலை 6.30 மணி முதல் 7 மணிக்குள் முடித்துவிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இவ்வாறு முன்னதாகவே உணவு எடுத்துக்கொள்ளும் பழக்கம் செரிமானத்திற்கும், உடல் செயல்பாடுகளுக்கும் பெரிதும் உதவுகிறது.
இதையும் படிங்க: இரவில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? தெரிஞ்சிக்கோங்க மக்களே.!
இட்லி எப்போது வேண்டும்.. எப்போது வேண்டாம்?
இரவு நேரத்தில் எளிதில் செரிமானமாகும் உணவுகளை தேர்வு செய்வது முக்கியமாக கருதப்படுகிறது. கோதுமை ரவை கிச்சடி, இட்லி போன்ற எளிய உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடலாம். அதே நேரத்தில், சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரவு நேரத்தில் இட்லி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அடை சாப்பிடலாம்:
சர்க்கரை நோயாளிகள் இரவு உணவாக கோதுமை ரவை கிச்சடி, சப்பாத்தி அல்லது சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட அடை போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வது சிறந்தது. மேலும் 40 வயதை கடந்தவர்கள் சிறுதானியங்களை அதிகமாக பயன்படுத்தி பொங்கல், உப்புமா அல்லது பிரியாணி போன்ற வடிவங்களில் சமைத்து சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது. ஆரம்பத்தில் இத்தகைய உணவு பழக்கத்தை மாற்றும் போது சிலருக்கு விரைவாக பசி எடுக்கக்கூடும். அவ்வாறு இரவு 10 மணிக்கு மேல் பசி எடுத்தால் பழங்களை சாப்பிடுவது நல்லது. கொய்யாப்பழம், ஆப்பிள் மற்றும் பப்பாளி போன்ற பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.