×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இரவில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? தெரிஞ்சிக்கோங்க மக்களே.!

நாம் சாப்பிடும் உணவுகளில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக இரவு நேரத்தில் ஒருசில உணவுகளை தவிர்க்க வேண்டும்.

Advertisement

இரவு உணவில் சிறு கவனக்குறைவு கூட அஜீரணம், அசிடிட்டி, தூக்கக் கோளாறு வரை கொண்டுசெல்லலாம்.

செரிமான சிக்கல்:

நமது உடலின் செரிமான அமைப்பு சரியாக செயல்பட, இரவு நேர உணவுப் பழக்கம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பகல் நேரத்தில் உடல் இயக்கம் அதிகமாக இருப்பதால், நாம் சாப்பிடும் உணவுகள் விரைவாக செரிமானமாகிவிடும். ஆனால் இரவு நேரத்தில் உடல் ஓய்வுக்குச் செல்லும் நிலையில் இருப்பதால், அதிக / செரிமானத்துக்கு சிக்கலான உணவுகள் செரிமானம் அடைய நீண்ட நேரம் எடுக்கும். இதனால் அஜீரணம், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தவிர்க்க வேண்டியவை:

கீரை, நெல்லிக்காய், கட்டித்தயிர், கஞ்சி, பாகற்காய், இஞ்சி போன்ற சில உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது. இவை பொதுவாக உடலுக்கு நன்மை தருபவையாக இருந்தாலும், இரவு நேரத்தில் செரிமான சுமையை அதிகரிக்கக்கூடும். இரவில் பால் சோறு போன்ற லேசான உணவுகள் ஏற்றதாக கருதப்படுகின்றன. அசிடிட்டி மற்றும் தூக்கக் கோளாறுகளைத் தவிர்க்க, சில குறிப்பிட்ட உணவுகளை இரவில் சாப்பிடாமல் இருப்பது அவசியம். 

தக்காளி வேண்டாம்:

தக்காளி அதிக அமிலத்தன்மை கொண்டதால் நெஞ்செரிச்சலை அதிகரிக்கலாம். நடுராத்திரியில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது மன அழுத்த ஹார்மோன்களை தூண்டி தூக்கத்தை பாதிக்கக்கூடும். கிரீன் டீயில் கூட அதிக அமிலம் மற்றும் கஃபைன் இருப்பதால், இரவில் குடிப்பது இதயத் துடிப்பு, பதட்டம் போன்றவற்றை ஏற்படுத்தலாம். எனவே, இதனை பகல் நேரத்தில் குடிப்பதே சிறந்தது. 

டீ - காபி வேண்டவே வேண்டாம்:

ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் மற்றும் வெங்காயம் சேர்த்த சாலட்கள் இரவில் சாப்பிடும் போது வயிற்றில் வாயு உருவாகி பிரச்சனையை அதிகரிக்கலாம். இதனால் தொண்டையில் எரிச்சல், நெஞ்சு கனத்த உணர்வு போன்றவை தோன்றும். மேலும், இரவில் ஒரு கப் காபி அல்லது டீ குடித்தாலே அதன் தாக்கம் 8 முதல் 14 மணி நேரம் வரை நீடித்து, இயல்பான தூக்கச் சுழற்சியை பாதிக்கக்கூடும்.

காரமான உணவுகள், கொழுப்பு நிறைந்த பீட்சா, பர்கர், எண்ணெயில் பொரித்த ஸ்னாக்ஸ் போன்றவை இரவில் சாப்பிடக் கூடாத உணவுகளின் பட்டியலில் முக்கிய இடம் பெறுகின்றன. இவ்வகை உணவுகள் செரிமானத்தை மந்தமாக்கி, வயிற்று வலி, நெஞ்செரிச்சல் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, இரவு உணவை எளிதில் செரிமானம் அடைய கூடிய லேசான உணவுகளை தேர்வு செய்வது நல்லது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#இரவு உணவு #Night Eating Habits #health tips
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story