உள்ளங்கையில் அதிக வியர்க்கிறதா?.. இந்த விஷயங்களை கவனியுங்க.!
உள்ளங்கையில் அதிகமாக வியர்வை வருவது ஏன்? எளிய முறையில் கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்பது குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
கோடைகாலத்தில் பொதுவாக கை மற்றும் உடல் பகுதிகளில் வியர்வை வெளியேறுவது இயல்பானது. ஆனால் ஒரு சிலருக்கு உள்ளங்கை பகுதிகளில் அதிகமாக வியர்க்கும். இதனை மருத்துவ ரீதியாக பாமர் கைப்பர் ஹைட்ரோசிஸ் என்று மருத்துவர்கள் அழைக்கின்றனர். இது உயிருக்கு ஆபத்தானது இல்லை என்றாலும் ஒருவரின் தன்னம்பிக்கையை குறைப்பதுடன், மற்றவருடன் கைகுலுக்கும் போது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்.
உள்ளங்கையில் வியர்க்க காரணம் என்ன?
இது தோல் சார்ந்த விஷயம் இல்லாமல் நரம்பு மண்டலம் மற்றும் ஹார்மோன் மாற்றங்களுடன் தொடர்புடையதாகும். பொதுவாக உடலின் வெப்பநிலையை சரியான நிலையில் வைக்க மூளை வியர்வை சுரப்பிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கும். சிலருக்கு இந்த சமிக்ஞைகள் எவ்வித தூண்டுதலும் இன்றி தவறாக செயல்படும் பட்சத்தில் அதிக வியர்வை வெளியேறும். இது பரம்பரை காரணமாகவும் இருக்கலாம்.
இதையும் படிங்க: எக்கச்சக்க நன்மைகளை தரும் நெல்லிக்காய்! ஆனால் இவர்கள் மட்டும் இதை சாப்பிடக் கூடாது! யாரெல்லாம் தெரியுமா?
உடல்நல கோளாறு:
தைராய்டு சுரப்பி அதிகமாக செயல்படுதல் (ஹைப்பர் தைராய்டிசம்), ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென குறைவது போன்றவையும் இதற்கு காரணமாக இருக்கலாம். மன அழுத்தம், பதட்டம் மற்றும் அதிகமான பயம் போன்ற மனநிலைகளும் உள்ளங்கை வியர்வையை அதிகரிக்கச் செய்யும்.
மருத்துவ சிகிச்சை:
இந்த பிரச்சனையை கட்டுப்படுத்த பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் தற்போது கிடைக்கின்றன. அவற்றை மருத்துவரின் ஆலோசனையுடன் மேற்கொள்வது அவசியம். கூடுதலாக தினசரி உணவில் அதிக காரம் உள்ள உணவுகளை குறைப்பது, கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது மற்றும் பருத்தி போன்ற துணியால் செய்யப்பட்ட கைக்குட்டைகளை பயன்படுத்துவது போன்ற பழக்கவழக்கங்களும் உதவியாக இருக்கும்.