எக்கச்சக்க நன்மைகளை தரும் நெல்லிக்காய்! ஆனால் இவர்கள் மட்டும் இதை சாப்பிடக் கூடாது! யாரெல்லாம் தெரியுமா?
நெல்லிக்காய் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் அளிப்பதுடன், சிலருக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. குறிப்பிட்ட உடல்நிலை பிரச்சனைகள் உள்ளவர்கள் நெல்லிக்காயைத் தவிர்க்க வேண்டும்.
ஆரோக்கியத்தை பேணுவதில் நெல்லிக்காயின் பங்கு மிக முக்கியமானது. ஆனால் சில உடல்நிலைகளில் இதை தவிர்ப்பது அவசியம். நெல்லிக்காய் உடலில் பல நன்மைகள் அளிப்பதோடு, சிலருக்கு எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.
செரிமானப் பிரச்சனைகள்
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி காரணமாக அதில் அமிலத்தன்மை அதிகம். எனவே, உங்களுக்கு அமிலத்தன்மை அல்லது வயிற்று எரிச்சல் இருந்தால் நெல்லிக்காயை சாப்பிட வேண்டாம். இல்லையெனில், வயிற்றில் அமில அளவு அதிகரித்து நெஞ்செரிச்சல், எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
வறண்ட சருமம்
ஆயுர்வேதத்தின் படி, நெல்லிக்காய் உடலின் ஈரப்பதத்தை குறைக்கும் தன்மை கொண்டது. ஏற்கனவே வறண்ட சருமம் உள்ளவர்கள் இதை எடுத்துக்கொண்டால், சருமம் மேலும் வறண்டதாகி அரிப்பு ஏற்படும். தலையில் ஈரப்பதம் குறைந்து முடி உதிர்தல் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, இதை எடுத்துக்கொள்ளும் போது தண்ணீர் அதிகமாக குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பதானால் உடலில் உண்டாகும் பக்கவிளைவுகள்! இவர்களாம் இதை குடிக்கவே கூடாதாம்!
ரத்தப்போக்கு பிரச்சனைகள்
நெல்லிக்காய் இயற்கையாகவே ரத்த உறைதலை தாமதப்படுத்தும் பண்பைக் கொண்டுள்ளது. ஹீமோபிலியா போன்ற ரத்தப்போக்கு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு முன்பாக இரண்டு வாரங்களுக்கு முன் இதன் பயன்பாட்டை நிறுத்துவது பாதுகாப்பானது.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்
கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் அதிக அளவு நெல்லிக்காய் உட்கொள்வது பாதுகாப்பானது என்ற அறிவியல் ஆதாரம் இல்லை. இது வயிற்று வலி, செரிமான கோளாறு மற்றும் நீரிழப்பு ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்த நேரத்தில் நெல்லிக்காய் எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.
குறைந்த ரத்த சர்க்கரை
நெல்லிக்காய் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் தன்மை கொண்டது. எனவே, ஏற்கனவே குறைந்த ரத்த சர்க்கரை உள்ளவர்கள் அல்லது நீரிழிவு மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளும் முன் கவனம் தேவை. சர்க்கரை அளவு திடீரென குறையும் அபாயம் இருப்பதால், மருத்துவ ஆலோசனை அவசியம்.
சிறுநீரக பிரச்சனைகள்
நெல்லிக்காயில் உள்ள ஆக்ஸலேட்டுகள் உடலில் கால்சியத்துடன் இணைந்து சிறுநீரக கற்களை உருவாக்கக்கூடும். சிறுநீரக கற்கள் அல்லது சிறுநீரக நோய்கள் உள்ளவர்கள் நெல்லிக்காயைத் தவிர்ப்பது நல்லது.
ஆக, நெல்லிக்காய் ஒரு இயற்கை மருத்துவ சக்தியாக இருந்தாலும், சில உடல்நிலை பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது தீங்கு விளைவிக்கக்கூடியது. எனவே, உங்கள் உடல்நிலையைப் பொறுத்து நெல்லிக்காயை எடுத்துக்கொள்வதில் முன் கவனமாக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் மாதுளம் பழம்! யாரெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க...