×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிகமா காபி குடிப்பது உயிருக்கு ஆபத்தா? ஒருநாளைக்கு 25 முறை காபி குடித்தால் என்ன ஆகும்?

Drinking up to 25 cups of coffee a day safe for heart

Advertisement

அளவுக்கு அதிகமாக டீ அல்லது காபி குடிப்பது உடலுக்கும், உயிருக்கும் ஆபத்து என நாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால், சமீபத்திய ஆய்வு ஓன்று ஒருநாளைக்கு 25 முறை காபி குடித்தாலும் எந்த விதமான பாதிப்பும் இல்லை என நிருபித்துள்ளது.

பொதுவாக அதிகமான காபி குடிப்பதால் இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டு மாரடைப்பு அல்லது ஸ்டோக்ஸ் வர வாய்ப்புள்ளதாக பல்வேறு ஆராய்ச்சிகள் கூறியுள்ளன. ஆனால், லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சுமார் 8000 நபர்களை தேர்வு செய்து இந்த சோதனையை நடத்தியுள்ளனர்.

மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்ட இவர்களில் ஒரு பகுதியினர் ஒரு நாளைக்கு ஒரு கப்பிற்கு குறைவாகவும், ஒரு பகுதியினர் 1 முதல் மூன்று கப் வரையிலும், மூன்றாவது பகுதியினர் 3 முதல் 5 கப் வரையிலும் அதில் ஒருசிலர் ஒருநாளைக்கு 25 கப் வரை காபி குடித்துள்ளனர்.

குறிப்பிட்ட இடைவேளைக்கு பிறகு இவர்கள் அனைவரையும் சோதித்ததில் 25 கப் வரை காபி குடித்தவர்களின் இதய செயல்பாடும், ஒரு கப்பிற்கு குறைவாக காபி குடித்தவர்களின் இதய செயல்படும் ஒன்றாகவே இருந்துள்ளது. எனவே காபி குடிப்பதனால் எந்த பாதிப்பும் இல்லை என்கிறது இந்த ஆய்வு.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல, எதுவாக இருந்தாலும் அளவோடு இருப்பது உடலுக்கும், உயிருக்கு நன்மை பயக்கும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#health tips #Health tips in tamil
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story