உடல் எடை குறைப்பும், வியர்வை வெளியேற்றமும்.. உண்மை இதுதான் தெரிஞ்சிக்கோங்க பாஸ்.!
வியர்வை வெளியேற உடற்பயிற்சி செய்தாலும், நாம் நினைப்பது உண்மையில்லை என ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்போர் கட்டாயம் ஒருசில விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.
உடல் குளிர்ச்சி அமைப்பு:
நமது உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது என்பது கொழுப்பு கரைவதை குறைக்காது. இது உடலின் குளிர்விக்கும் அமைப்பு ஆகும். மூலையில் இருக்கும் ஹைப்போதலாமஸ் பகுதி உடற்பயிற்சி செய்யும்போது அல்லது வெயிலில் உடல் வெப்பநிலை அதிகரிக்கும்போது, அதனை சமன் செய்ய வியர்வை சுரப்பியை தூண்டி வியர்வை வெளியேறும். வியர்வை காற்றில் ஆவியாகும்போது இயற்கையாக உடல் குளிர்ச்சியாகும்.
இதையும் படிங்க: கோடையில் கரும்பா? தர்பூசணியா? எந்த ஜூஸ் நல்லது?
நீர் இழப்பு உண்மையில்லை:
உடலில் வியர்வை வெளியேறினால் உடல் எடை குறையும் என்பது தற்காலிகமானது. ஆனால், அது உடலின் கொழுப்பு குறைந்ததாக ஈடுகொள்ளப்படமாட்டாது. இது சாதாரண நீர் இழப்பு ஆகும். உடற்பயிற்சியின்போது வெளியேறும் நீர், உப்பு போன்றவை இரண்டு டம்ப்ளர் நீர் குடித்ததும் உடலுக்கு கிடைத்துவிடும். ஆகையால், உடற்பயிற்சி செய்தபோது வெளியேறிய 200 மில்லி நீர், மறுபடியும் நாம் தண்ணீர் குடித்ததும் கிடைத்துவிடும். உடலில் கொழுப்பின் அளவு குறைவதே உண்மையான உடல் எடை குறைப்பு ஆகும்.
இதையும் படிங்க: கோடையில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்.. இதையெல்லாம் தப்பித்தவறியும் சாப்பிடாதீங்க.!