×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஊசி மூலம் எடை குறைப்பு.. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

ஊசி மூலம் எடை குறைக்கும் ஒசெம்பிக், மௌஞ்சாரா போன்ற மருந்துகள் சர்க்கரை நோயாளிகளுக்கு பாதுகாப்பானதா? பக்கவிளைவுகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisement

மரபு, உணவுமுறை, மனஅழுத்தம் ஆகியவற்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி முக்கியம்:

இந்தியாவில் சுமார் 90% பேருக்கு டைப் 2 நீரிழிவு நோய்க்கான வாய்ப்பு காணப்படுகிறது. இதில் மரபு முக்கிய காரணியாக உள்ளது. குடும்ப பின்னணி காரணமாக சிலருக்கு பிறவியிலேயே சுமார் 40% அபாயம் இருக்கலாம். சிறுவயது முதலே சரியான உணவுமுறை மற்றும் ஒழுங்கையான உடற்பயிற்சி கடைப்பிடித்தால் 60% வரை அபாயத்தைத் தடுக்க முடியும்.

இதையும் படிங்க: தீக்காயம் ஏற்பட்ட உடனே இந்த தவறை மட்டும் செய்யாதீங்க! என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!!

முக்கிய காரணங்கள்:

மாவுச்சத்து, இனிப்பு, வெள்ளை சாதம் போன்ற கார்போஹைட்ரேட் அதிகமான உணவுகளை அதிகமாக உட்கொள்வதும், புரதச்சத்து குறைவான உணவுமுறையும் நீரிழிவுக்கு வழிவகுக்கும். உடற்பருமன் இருந்தால் அபாயம் மேலும் உயரும், அதனுடன் மரபு காரணமும் இணைந்தால் பாதிப்பு அதிகரிக்கும். மனஅழுத்தம், தூக்கமின்மை போன்ற வாழ்வியல் காரணிகளும் நீரிழிவை தூண்டும் முக்கிய அம்சங்களாகும். 1960-களுடன் ஒப்பிடும்போது இன்றைய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப அழுத்தங்கள் வாழ்க்கை முறையை பெரிதும் மாற்றியுள்ளதால், நோய் அபாயமும் உயர்ந்துள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கும் நீரிழிவு ஏற்படும். 

பக்கவிளைவு & கவனம்:

சமீபத்தில் Mounjaro மற்றும் Ozempic போன்ற மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. முதலில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட இம்மருந்துகள், உடல் எடையை குறைக்கும் திறன் காரணமாக எடை மேலாண்மைக்கும் பயன்படுத்தப்படுகின்றன. வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற ஆரம்ப நிலை பக்கவிளைவுகள் சிலருக்கு தோன்றலாம். பெரிய அளவில் நீண்டகால தீவிர பக்கவிளைவுகள் பெரும்பாலும் காணப்படுவதில்லை. நீரிழிவு இல்லாதவர்களும் எடை குறைப்பிற்காக இம்மருந்துகளை பயன்படுத்தலாம். ஆனால் மருத்துவர் பரிந்துரையின்றி சுயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

வாழ்க்கை மாற்றங்கள் நல்லது:

இத்தகைய எடை குறைக்கும் மருந்துகள் நிரந்தர தீர்வாக அமையாது. மருந்துகளை நிறுத்தியவுடன் மீண்டும் எடை அதிகரிக்கும். எனவே, மருந்துகளை எப்போதும் மருத்துவ கண்காணிப்பின் கீழ் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் வாரத்திற்கு ஒருமுறை எடுத்துக்கொண்டால், பின்னர் மாதத்திற்கு ஒருமுறை என இடைவெளியை மாற்றுவது போன்ற திட்டங்களை மருத்துவர் பரிந்துரைப்பார். நீரிழிவு மற்றும் உடற்பருமன் ஆகியவற்றை கட்டுப்படுத்த வாழ்க்கை முறை மாற்றங்களே அடிப்படை தீர்வாகும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Diabetes #weight loss #health tips #எடை குறைப்பு #சர்க்கரை நோய்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story