×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தீக்காயம் ஏற்பட்ட உடனே இந்த தவறை மட்டும் செய்யாதீங்க! என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!!

சமையல், அயர்ன், வெந்நீர் குளியல் போன்ற சமயங்களில் ஏற்படும் தீக்காயங்களுக்கு உடனடி முதலுதவி, தவிர்க்க வேண்டிய செயல்கள், சரியான பராமரிப்பு முறைகள் பற்றி முழுமையான வழிகாட்டி.

Advertisement

வீட்டில் தினசரி செய்யும் சமையல், துணி அயர்ன் செய்வது, வெந்நீர் குளியல் போன்ற சாதாரண செயல்களிலேயே தீக்காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபோன்ற தருணங்களில் உடனடி முதலுதவி தெரிந்திருக்க வேண்டும். தவறான வழிமுறைகள் பின்பற்றினால் காயம் மேலும் மோசமடைய வாய்ப்பு அதிகம்.

தீக்காயம் ஏற்படும் காரணங்கள்

சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் தெரித்துவிடுதல், சுடு தண்ணீர் ஊற்றிக்கொள்ளுதல் போன்றவை தீக்காயங்களுக்கு முக்கிய காரணங்களாகும். பெரிய பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.

இதையும் படிங்க: மழைக்காலம் ஆரம்பம்.. இதை செய்துவிட்டீர்களா.?! எச்சரிக்கை.!

செய்ய வேண்டியவை

தீக்காயம் பட்ட உடனே அந்த இடத்தை சாதாரண குளிர்ந்த தண்ணீரில் சுமார் 20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். இது எரிச்சலை குறைத்து ஆறுதல் அளிக்கும். கொப்புளங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை உடைக்காமல் பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை

எரிச்சலை குறைக்க ஐஸ்கட்டி வைப்பது தவறு. இது தோல் பாதிப்பை அதிகரிக்கும். கொப்புளங்களை கிள்ளுவது அல்லது உடைப்பது கூடாது. சிறிய காயங்களுக்கு தேவையற்ற ஆன்டிபயாட்டிக் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டாம். தோலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களே குணமாக உதவும்.

அதேபோல் பேண்டேஜ் போடுவதும் தவிர்க்க வேண்டும். இது காயத்தை ஈரமாக வைத்துத் தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். வெண்ணெய், டூத்பேஸ்ட் போன்றவற்றை தடவுவது மிகவும் ஆபத்தானது. அதற்கு பதிலாக மருத்துவர் பரிந்துரைக்கும் தீக்காய சிகிச்சை ஆயின்மெண்ட்களை பயன்படுத்தலாம்.

கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

காயத்துடன் ஆடைகள் ஒட்டியிருந்தால் அவற்றை உடனடியாக அகற்ற முயற்சிக்க வேண்டாம். மெதுவாக கையாள வேண்டும். தீக்காயம் பட்ட இடத்தை துணியால் துடைப்பதும் தவறு. பெரிய காயமாக இருந்தால் முதல் மூன்று நாட்கள் சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாக்க வேண்டும்.

வீட்டிலேயே சரிசெய்ய முடியாத தீக்காயங்கள் இருந்தால் தாமதிக்காமல் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம். சரியான முதலுதவி மற்றும் கவனம் இருந்தால் தீக்காயங்களின் பாதிப்பை குறைத்து விரைவாக குணமடைய முடியும்.

 

இதையும் படிங்க: மாரடைப்பு பயமா? இளமையிலே வரும் மாரடைப்பை தவிர்க்க என்ன செய்யவேண்டும்?

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தீக்காயம் முதலுதவி #Burn First Aid #Home Safety Tips #தீக்காய சிகிச்சை #Health Care Tamil
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story