மழைக்காலம் ஆரம்பம்.. இதை செய்துவிட்டீர்களா.?! எச்சரிக்கை.!
மழைக்காலம் ஆரம்பம்.. இதை செய்துவிட்டீர்களா.?! எச்சரிக்கை.!
நம் வாழ்வாதாரத்திற்கும் நாட்டின் செழிப்பிற்கும் மழை காரணமானாலும், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை மழைக்காலங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காதபட்சத்தில் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளுக்குள்ளாகும் அபாயம் அதிகம். எனவே, மழைக்காலங்களைச் சீராகவும் பாதுகாப்பாகவும் எதிர்கொள்ள சில முக்கியமான வழிமுறைகளை கவனிக்க வேண்டும்.
மழை தொடங்கும் முன்பே வீட்டில் உள்ள குடைகள், ரெயின்கோட், படுக்கைப் போர்வைகள் போன்றவற்றை நன்றாக சுத்தம் செய்து பயன்படுத்தத் தயாராக வைத்திருக்க வேண்டும். வெளியே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் அவசியமில்லாமல் மழையில் சஞ்சரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மழைத்தண்ணீரில் நடப்பது மின்சார கசிவு, தோல் நோய், அரிப்பு, நகப் புண் போன்ற தொற்றுகள் ஏற்பட வழிவகுக்கும். மழை காரணமாக போக்குவரத்து மற்றும் பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்படக்கூடியதால், தேவையான உணவுப் பொருட்கள், பால், குழந்தைகள் மற்றும் முதியோருக்கான அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வீட்டில் வைத்திருக்க வேண்டும். இதனால் உணவுத் தட்டுப்பாடு அல்லது அவசர சூழ்நிலைகள் உருவாகாமல் தடுக்க முடியும்.
இதையும் படிங்க: தாங்க முடியாத கொசுத்தொல்லை.. தப்பிக்க எளிமையான வழிகள் இதோ.!
வெள்ளம் மற்றும் மழைப்பொழிவால் மின்சாரம் தடைபடும் சாத்தியம் உள்ளதால், Emergency lights, மெழுகுவர்த்தி போன்றவற்றை பயன்படுத்தத் தயாராக வைத்திருக்க வேண்டும். வீட்டின் சுற்றுப்புறத்தில் நீர் தேங்காதபடி கவனம் செலுத்த வேண்டும். சமையலறை, படுக்கையறை போன்ற முக்கிய பகுதிகளில் தண்ணீர் புகாமல் பாதுகாக்க வேண்டும்.
கதவுகள், ஜன்னல்களுக்கு கொசு வலை அமைத்தல் மேலும் பாதுகாப்பாக இருக்கும். அனைவரும் சூடான நீரும் & வெப்பமான உணவும் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். குடிநீரை நன்றாகக் கொதிக்க வைத்து வெதுவெதுப்பாகக் குடிப்பது அவசியம். வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது தொற்று பரவலைத் தடுக்க உதவும்.
குறிப்பாக மழைக்காலங்களில் தும்மல் மற்றும் காற்று மூலம் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம். மழைக்காலத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் அதே நேரத்தில் சுகாதாரத்திலும், பாதுகாப்பிலும் விழிப்புடன் இருப்பது அவசியம்.