BP மற்றும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் இளநீர் குடிக்கலாமா? இதை தெரிஞ்சுக்கோங்க!
BP மற்றும் சர்க்கரை நோயாளிகள் தினமும் இளநீர் குடிக்கலாமா? நிபுணர்கள் கூறும் ஆரோக்கிய தகவல்கள் மற்றும் தேவையான முன்னெச்சரிக்கைகள்.
BP (இரத்த அழுத்தம்) மற்றும் சர்க்கரை நோய் (Diabetes) கொண்டவர்கள் தினமும் இளநீர் குடிக்கலாமா என்ற கேள்வி பலரிடமும் உள்ளது. இளநீர் இயற்கையாகவே பல தாதுக்களை கொண்டது, குறிப்பாக பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் சோடியம் சத்து குறைவாக இருப்பதால் இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு, இளநீரில் இயற்கை சர்க்கரை உள்ளபோதிலும், அதன் Glycemic Index குறைவாக இருப்பதால், அளவோடு குடித்தால் பாதுகாப்பானதாக இருக்கும். பொதுவாக தினமும் 100–150 மில்லி அளவில் குடிப்பது பரிந்துரைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் குளிர்காலத்தில் இதை செய்யுங்கள்.. பலன் நிச்சயம்.!
இளநீர் குடிக்கும்போது பேக்கேஜ்டு (சர்க்கரை சேர்க்கப்பட்ட) நீரை தவிர்த்து, இயற்கையான புதிய இளநீரை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். சிறுநீரக கோளாறுகள் அல்லது அதிக பொட்டாசியம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பிறகே தினசரி குடிக்க வேண்டும்.
மொத்தத்தில், BP மற்றும் சர்க்கரை நோயாளிகள் தினமும் இளநீர் குடிக்கலாம், ஆனால் மிதமான அளவு மற்றும் மருத்துவ ஆலோசனை அவசியம்.
இதையும் படிங்க: காய்ச்சல் அடிக்கும்போது இளநீர் அருந்தலாமா? பலன் அளிக்குமா, பாதுகாப்பானதா?