×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குளிக்க சோப்பு நல்லதா? பாடி வாஷ் நல்லதா? மக்களே தெரிஞ்சிக்கோங்க.!

உப்பு தண்ணீர், நல்ல தண்ணீரை பொறுத்து பாடி வாஷை தேர்வு செய்ய வேண்டும்.

Advertisement

உடல்நல சுகாதாரத்தில் சோப்பின் பங்கு முக்கியமானது என்பதால், அதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

அமில நிலை:

தினமும் நாம் சுகாதாரத்துக்காக பயன்படுத்தும் சோப், பாடி வாஷ் ஆகியவற்றை சரும ஆரோக்கியத்துடன் தொடர்புபடுத்தி தேர்வு செய்ய வேண்டும். சோப்கள் சபோனிபிகேஷன் என்ற முறையில் தயாரிக்கப்படுகிறது. இது இறுதிக்கட்டத்திலேயே 9 முதல் 11 பிஎச் அல்கலைன் அளவுள்ள சோப்பாக மாறுகிறது. இவை சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெயை அகற்றி அமில சமநிலையை சீர்குலைய வைக்கும்.

இதையும் படிங்க: குளிர்காலத்தில் பாலியல் உறவு மேம்பட வேண்டுமா? டாக்டர் சொல்லும் சூப்பர் டிப்ஸ்.!

பாடி வாஸ்:

ஆனால், பாடிவாஷ் சருமத்தின் இயற்கையான அமிலநிலைக்கு ஏற்பட உருவாக்கப்படுகிறது. இது கிளிசரின், ஹைலூரோனிக் அமிலம், நியாசினமைடு போன்ற ஈரப்பதம் தரும் பொருளால் உருவாக்கப்படுகிறது. இது மென்மையாகவும், சருமத்துக்கு பாதுகாப்பாகவும் இருக்கும்.

தேர்வில் கவனம்:

இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை தங்களின் சருமத்துக்கு ஏற்பட சோப்பை தேர்வு செய்யலாம். இளம் வயதினருக்கும், எண்ணெய் பசை சருமம், முகப்பரு பாதிப்பு உடையோருக்கு வேம்பு, தேயிலை கொண்ட பாக்டீரியா எதிர்ப்பு சோப்பு நல்லது. வறண்ட சருமம் உடையோருக்கு சல்பேட், நறுமணம் இல்லாத பாடி வாஷ் நல்லது. வறண்ட, மெல்லிய சருமம் சேராமைடு, பாதாம் எண்ணெய் ஈரப்பதம் கொண்ட பாடி வாஷ் நல்லது.

கோடைகாலத்தில் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகள் நல்லது. குளிர்காலத்தில் ஷியா வெண்ணெய் சேர்க்கப்பட்ட பாடி வாஷ் நல்லது. கடினமான நீரை குளிக்க பயன்படுத்தும் பட்சத்தில் பாடி வாஷ் நல்லது.

இதையும் படிங்க: சமையல் செய்ய எண்ணெய் பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் இதுதான்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#health tips #Body wash Vs Soap
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story