சமையல் செய்ய எண்ணெய் பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் இதுதான்.!
Health Tips: சமைக்கும்போது பயன்படுத்தப்படும் எண்ணெயில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
எண்ணெய் உணவின் சுவைக்காக மட்டுமல்லாமல் உடல் நலனுக்கும் முக்கியமானது என்பதால் நாம் அதனை சரியாக தேர்வு செய்ய வேண்டும்.
ஊட்டச்சத்து தேவை:
நாம் தினமும் உணவுப்பொருளை சமைக்கும்போது, கட்டாயம் எண்ணெயை பயன்படுத்துவோம். ஒவ்வொரு நாளும் நாம் அதனை பயன்படுத்துவது உணவின் சுவைக்காக மட்டுமல்லாது, ஊட்டச்சத்துக்கள் தேவைக்காகவும் என்பதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். உடலின் ஆரோக்கியத்தில் எண்ணெய்க்கும் பெரும்பங்கு உண்டு.
இதையும் படிங்க: Green Banana: பச்சை வாழைப்பழம் கேட்டு வாங்கி சாப்பிடுங்க.. என்னென்ன நன்மைகள்? தெரிஞ்சிக்கோங்க..!
அளவு முக்கியம்:
எண்ணெயில் இருக்கும் வைட்டமின் ஏ, டி, ஈ, கே கொழுப்பில் கரையும் வைட்டமினை உடல் உறிஞ்ச முக்கிய காரணமாக அமைகிறது. உணவில் போதுமான அளவு கொழுப்புசத்து இல்லாத பட்சத்தில், அதிக ஊட்டச்சத்து கொண்ட உணவு தனது ஊட்டச்சத்தை சரிவர உடலுக்கு வழங்காது. இதனை சரிசெய்யும் முக்கிய பங்கு எண்ணெய்க்கு உண்டு. எண்ணெயை நாம் மிதமான அளவில் சேர்த்துக்கொண்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும். சத்துக்களை ஆராய்ந்து நமக்கு தேவையானதை தேர்வு செய்ய வேண்டும்.
சூடேற்றுவதில் கவனம்:
ஒரு எண்ணெயை நாம் சூடேற்றும்போது, அது எந்த டிகிரியில் சூடாகிறது, இதுவரை அதன் கொதிநிலை என்பதை கணக்கிட வேண்டும். அந்த வரம்பை எண்ணெய் தாண்டும்போது எண்ணெயில் இருக்கும் சேர்மங்கள் மாறும். அதன் சுவை, தரம் வேறுபாடும். இது எண்ணெயின் தன்மை மற்றும் நமது உடல்நலனை பாதுகாக்கும். ஒவ்வொரு எண்ணெயிலும் ஒவ்வொரு பலன்கள், பயன்கள் உண்டு. அதனால் அதில் இருக்கும் சத்துக்கள் குறித்து நாம் அறிந்து, நமக்கு தேவையானதை தேர்வு செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: பாத்திரம் கழுவும்போது இந்த தவறுகளை செய்கிறீர்களா?.. மறைந்திருக்கும் ஆபத்து.!