×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சம்மணமிட்டு சாப்பிடுவதால் நமது உடலுக்கு எண்ணலாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இதோ!

Benefits of eating food at sitting on floor

Advertisement

நமது முன்னோர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்த ஒவ்வொரு செயலுக்கு பின்னும் பல்வேறு அறிவியல் சார்ந்த உணமைகள் உள்ளன. அதுபோன்ற ஒன்றுதான் சம்மணமிட்டு சாப்பிடுவது. வளர்ந்துவிட்ட இந்த நாகரிக உலகில் அமர்ந்து சாப்பிடவே நேரம் இல்லாமல் நின்றுகொண்டே சாப்பிட்டுவிட்டு நடையை கட்டுபவர்கள் ஏராளம்.

இப்படி நின்று கொண்டு சாப்பிடுவது, நாற்காலியில் அமர்ந்துகொண்டு சாப்பிடுவது இதெல்லாம் சரியா? ஏன் சம்மணமிட்டு சாப்பிட வேண்டும்? வாங்க பாக்கலாம்.

நாம் சாப்பிடும்போது நின்றுகொண்டு சாப்பிட்டாலோ அல்லது நாற்காலியில் அமர்ந்துகொண்டு சாப்பிட்டாலோ நமது கால்கள் கீழே தொங்கியவாறுதான் இருக்கும். இதனால் அதிகப்படியான இரத்த ஓட்டம் நமது கால்களுக்கே இருக்கும்.

நாம் சாப்பிடும்போது இப்படி செய்வதால் இரத்த ஓட்டம் கால் பகுதியில் அதிகமாகி நமக்கு செரிமான பிரச்னையை உண்டுபண்ணுகிறது. மேலும், நாம் சாப்பிட உணவு ஜீரணம் ஆவதற்கும் அதிக நேரம் தேவை படுகிறது.

இதுவே நாம் தரையில் அமர்ந்து சம்மணமிட்டு சாப்பிடும்போது இரத்த ஓட்டம் நமது கால் பகுதியில் இருப்பதை விட நமது வயிற்று பகுதியில்தான் அதிகமாக இருக்கும். இதனால் நாம் உண்ணும் உணவு எளிதில் ஜீரணம் ஆடைகிறது. எனவே சம்மணமிட்டு சாப்பிடுங்கள், ஆரோக்கியத்துடன் வாழுங்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Health tips in tamil #health tips
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story