×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சாப்பிட்டதும் இவ்வாறான விஷயங்களை செய்றீங்களா? ரொம்ப ஆபத்து.. உஷார்.!

Health News: சாப்பிட்டதும் உறங்கினால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.

Advertisement

உணவுக்குப்பின் சிறிது நேரம் ஓய்வெடுத்து உடற்பயிற்சி செய்வது நல்லது.

உடல் ஆற்றல்:

தினமும் நாம் சாப்பிடும் உணவு உடலுக்கான ஆற்றல், சக்தி, ஊட்டச்சத்துக்களை வழங்கும். உணவு சாப்பிட்ட பின்னர் நாம் செய்யும் ஒருசில வழக்கம், உடலுக்கு சரியான சத்துக்களை உறிஞ்சுவதில் தடையை ஏற்படுத்தும். இதனால் செரிமான மண்டலத்தின் இயக்கமும் பாதிக்கப்படும். நாம் நமது உடல் ஆற்றலை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.

இதையும் படிங்க: Health Tips: குட்டித்தூக்கம் போட ஆசையா? இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!

அசௌகரியம்:

உணவு சாப்பிட்டதும் சிலர் ஓய்வெடுக்க வேண்டும் என நினைப்பார்கள். அவர்கள் சாப்பிட்டதும் படுத்துக்கொள்வது செரிமான செயல்பாடுகளை கடுமையாக பாதிக்கும். இதனால் வயிற்றில் அமிலம் உண்டாகும். நெஞ்சு எரிச்சல், அசௌகரியம் ஏற்படும். உணவுக்குப்பின் 30 முதல் 45 நிமிடம் வரை நேராக உட்கார வேண்டும். 

தண்ணீர்:

ஒருசிலர் உணவு சாப்பிடும்போது அல்லது சாப்பிட்டபின் அதிக தண்ணீரை குடிப்பார்கள். இது உணவு செரிமானம் அடைய சிரமம் ஏற்படும். வயிற்றில் உள்ள உணவுகளை செரிமானம் செய்ய உதவும் சுரப்பியில் பாதிப்பு ஏற்படும். முழு அளவில் தண்ணீர் குடிக்காத பட்சத்தில், தண்ணீரை அளவுடன் குடிக்க வேண்டும். ஒவ்வொரு மணிநேரத்திற்கு 200 முதல் 300 மில்லி நீர் குடிப்பது நல்லது.

உடற்பயிற்சி:

உடல் எடையை கட்டுப்படுத்த ஜிம்க்கு செல்வது, உடற்பயிற்சி செய்வது நல்லது. ஆனால், செரிமான பணிக்காக ஆற்றலை அதிகரிக்க உடல் செரிமான பணியை மேம்படுத்தும் போது, தீவிர உடற்பயிற்சி செய்வது அசௌகரியம், வாந்தி, உணர்வு, செரிமான கோளாறு உண்டாகும். இதனால் உணவுக்குப்பின் சிறிது நேரம் ஓய்வெடுத்து, பின் உடற்பயிற்சி செய்யலாம்.

உணவு சாப்பிட்டதும் டீ, காபி குடிப்பது பலருக்கும் தினசரி வாடிக்கையாக இருக்கிறது. இவ்வாறான செயலால் உணவில் இருக்கும் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சும் திறன் பாதிக்கப்படும். நீண்ட காலத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உருவாகும். உணவுக்குப்பின் ஒருமணிநேரம் இவ்வகை பானம் குடிக்காமல் இருக்க வேண்டும். உணவின் தரமும் முக்கியம். 
 

இதையும் படிங்க: இரவில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? தெரிஞ்சிக்கோங்க மக்களே.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#health tips #ஆரோக்கியம் #உடல் எடை மேலாண்மை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story