இந்த 5 அறிகுறிகள் உங்களுக்கு இருக்குதா? கவனமாக இருங்க மக்களே..!
Health Tips: உங்களின் உடலில் கீழ்காணும் 5 அறிகுறிகள் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.
நமது உடலை ஆரோக்கியமாக பராமரிக்க கட்டாயம் ஒருசில உடல் அறிகுறிகளை தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆரோக்கியம்:
நாம் ஆரோக்கியமாக இருப்பதை உடலின் தோற்றதால் உணர்ந்தாலும், ஒருசில உடல் அறிகுறிகளை கவனிக்க வேண்டும். இது மிகப்பெரிய உடல்நல பிரச்சனைகளின் அறிகுறிகளாக இருக்கலாம். இவ்வாறான அறிகுறிகளை நாம் முன்பே கண்டறிந்தால், பின்னாளில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் தவிர்த்துவிடலாம்.
இதையும் படிங்க: உங்களுக்கு இந்த 5 அறிகுறிகள் இருக்கா? சிறுநீரக புற்றுநோய் அபாயம்.. உஷார் மக்களே.!
சோர்வு:
இரவில் நாம் சரியாக உறங்கினாலும், அதன் பின்னரும் உடலில் சோர்வு மற்றும் ஆற்றல் இல்லாமல் உணர்ந்தால், தைராய்டு பிரச்சனை, ரத்த சோகை, வைட்டமின் குறைபாடு, நீண்டகால மனஅழுத்தம், தரம்குறைந்த தூக்கம் காரணமாக இருக்கலாம். இதனால் உடல் சோர்வு நீடித்தால் அதனை சரிசெய்யும் முயற்சிகள் வேண்டும்.
வயிறு பிரச்சனை:
அதாவது வயிறு உப்பிசம், வாயுத்தொல்லை, மலச்சிக்கல் பிரச்சனைகள் நீடித்தால் உணவில் நார்சத்து குறைவாக இருக்கலாம். சில உணவுகளை உடல் ஏற்றும்கொள்ளாமலும் இருக்கும். செரிமான பிரச்சனை காரணமாக இவ்வாறான உடல்நலக்குறைபாடு ஏற்படலாம். இதனை கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.
தலைவலி:
நமது உடலில் நீர்ச்சத்து குறைவது, தாமதமாக உணவு எடுத்துக்கொள்வது காரணமாக சிலருக்கு தலைவலி ஏற்படும். பார்வைக்குறைபாடு உடையோருக்கு தலைவலி, ஒற்றைத்தலைவலி ஏற்படலாம். தொடர்ந்து தலைவலி ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
இதயத்துடிப்பு:
நாம் அமைதியாக ஓய்வு நிலையில் இருக்கும்போதும், வழக்கத்தைவிட இதயம் அதிகமாக துடிக்கும் பட்சத்தில், உடற்பயிற்சியின்மை, மனஅழுத்தம், நீர்சத்து குறைபாடு, காய்ச்சல் காரணமாக இதயத்துடிப்பு அதிகம் இருக்கலாம். இது வழக்கத்துக்கு மாறாக இருந்தால் நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்படும். இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
தூக்கம் & உணவு:
இரவு நேரத்தில் தூங்கும்போது அடிக்கடி விழிப்பது, காலையில் அதிக சோர்வு நல்லதல்ல. அதேபோல, உடற்பயிற்சி இல்லாமலேயே உடல் எடை குறைவது கவனிக்க வேண்டியது. இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.
இதையும் படிங்க: பலாப்பழ கொட்டையில் மறைந்து கிடக்கும் நன்மைகள்.. அசத்தல் விபரம் இதோ.!