பலாப்பழ கொட்டையில் மறைந்து கிடக்கும் நன்மைகள்.. அசத்தல் விபரம் இதோ.!
Jackfruit Seeds Health Benefits: சுவைமிகுந்த பலாப்பழத்தில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன.
புரதம், நார்சத்து, வைட்டமின்கள் பலாப்பழத்தின் விதையில் இருக்கின்றன.
பலாப்பழம்:
Rich in Protein, Fiber, Vitamins: நறுமண சுவை ஒருங்கே கொண்ட சுவைமிகுந்த பலாப்பழம் பலருக்கும் பிடித்த உணவாகும். இதனை சாப்பிடும் பலரும் அதன் கொட்டைகளை பயன்படுத்தாமல் தூக்கி வீசுகின்றனர். பலாப்பழத்தை சாப்பிட்ட பின் கிடைக்கும் கொட்டையில் புரதம், நார்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஆண்டி-ஆக்சிடன்ட் நிறைந்து கிடக்கின்றன. பலாக்கொட்டையை இருக்கும் ஊட்டச்சத்து, கார்போ ஹைட்ரேட், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புசத்து உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை தருகிறது.
இதையும் படிங்க: லேட்-நைட்டில் பிரியாணி சாப்பிட ஆசையாக இருக்குதா? இதையெல்லாம் கவனிங்க பாஸ்.!
ஆற்றல்:
இதனால் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், தசையின் செயல்பாடும் மேம்படும். சீரான வளர்சிதை மாற்றத்துக்கு உதய் செய்யும். பலாக்கொட்டையை இருக்கும் ஊட்டச்சத்துக்கள் செரிமான அமைப்பை வலுப்படுத்தும். நார்சத்து நிறைந்த பலாக்கொட்டை சீரான செரிமானத்துக்கு உதவும். மலச்சிக்கலை குறைக்கும். குடலில் வாழும் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவி செய்யும்.
எதிர்ப்பு சக்தி:
பலாக்கொட்டையை இருக்கும் பிலானவாய்டு, பீனாலிக் கலவை உடல் செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கும். நாள்பட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கும். சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றிகளாக செயல்படும். இதய ஆரோக்கியத்தை பரமர்ப்பிப்பதில் பலாக்கொட்டைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைக்கும். நார்சத்து கேடான கொழுப்புகளை வெளியேற்றும். உடல் எடையை குறைக்க புரதசத்து, நார்சத்து நிறைந்த பலாக்கொட்டை நல்லது. புற்றுநோய் எதிர்ப்பு பண்பும் உள்ளது. இரும்புசத்து, துத்தநாகம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இதையும் படிங்க: இல்லத்தரசிகளே தெரிஞ்சிக்கோங்க.. பிரஷர் குக்கர் வெடிக்காமல் இருக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்.!