×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீட்டிற்குள் குவிந்திருந்த பணக்குவியல்! இரண்டு சகோதரிகள் வீட்டில் நடந்த அதிரடி வேட்டை.. போலீசாருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி..!!!

மகாராஷ்டிராவின் வாஷிம் பகுதியில் வட்டித் தொழில் செய்ததாக கூறப்படும் சகோதரிகளின் வீட்டில் சோதனை நடத்தி ரூ.13 லட்சம் ரொக்கம் மற்றும் 88 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் பகுதியில் வட்டித் தொழில் தொடர்பாக நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரூ.13 லட்சம் ரொக்கம் மற்றும் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான 88 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லாகாலா பகுதியில் இரண்டு சகோதரிகளின் வீட்டில் கூட்டுறவுத் துறையினரும் காவல்துறையினரும் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டனர்.

வீட்டில் குவிந்திருந்த ரொக்கம், வெள்ளி

வட்டிக்கு பணம் கொடுத்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் லாகாலா பகுதியில் குறிப்பிட்ட வீட்டை சோதனையிட்டனர். அப்போது உரிய கணக்கில் காட்டப்படாத ரூ.13 லட்சம் ரொக்கம் சிக்கியது. மேலும், சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ளதாக கூறப்படும் 88 கிலோ வெள்ளிப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன.

இதையும் படிங்க: தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய 19 வயது ஐடிஐ மாணவருக்கு நடந்த அதிர்ச்சி! காற்றில் பறந்து வந்த எமன்... அடுத்த நொடியே பறிபோன உயிர்! கதறும் பெற்றோர்...!!!

வெற்று காசோலைகள், ஆவணங்கள் பறிமுதல்

பணத்தை கைப்பற்றியதுடன் அதிகாரிகள் அங்கிருந்த முக்கிய ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். பூர்த்தி செய்யப்படாத வெற்று காசோலைகள், வெற்று பத்திரங்கள் மற்றும் வட்டி பரிவர்த்தனைகள் தொடர்பான கணக்கு பதிவேடுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவை வட்டித் தொழில் தொடர்பான பரிவர்த்தனைகளை கண்டறிய உதவும் என கூறப்படுகிறது.

சகோதரிகளிடம் போலீஸ் விசாரணை

சோதனையில் கிடைத்த பணம், வெள்ளி மற்றும் ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமாக வட்டிக்கு பணம் கொடுத்தார்களா, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளுக்கான முறையான கணக்குகள் உள்ளனவா என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாஷிம் பகுதியில் நடந்த இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இரு சகோதரிகளின் வட்டித் தொழில் தொடர்பான பின்னணி குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: இப்படி ஆகி போச்சே..! இன்ஸ்டாவில் புகைப்படத்தைப் பார்த்து காதலித்த வாலிபர்..! ஆனால். பூங்காவில் நடந்த பெரிய ட்விஸ்ட்.... வைரல் சம்பவம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#வாஷிம் சோதனை #Maharashtra Moneylenders #கந்துவட்டி #88 கிலோ வெள்ளி #ரூ.13 லட்சம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story