இப்படி ஆகி போச்சே..! இன்ஸ்டாவில் புகைப்படத்தைப் பார்த்து காதலித்த வாலிபர்..! ஆனால். பூங்காவில் நடந்த பெரிய ட்விஸ்ட்.... வைரல் சம்பவம்..!!!
சமூக வலைத்தளத்தில் ஏஐ மூலம் இளமையான தோற்றத்தில் புகைப்படங்களை பதிவிட்ட 50 வயது பெண்ணை காதலித்த 27 வயது இளைஞர், நேரில் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார்.
சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் மூலம் தொடங்கிய காதல், நேரில் சந்தித்தபோது எதிர்பாராத திருப்பத்தை சந்தித்துள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் இளமையான தோற்றத்தில் புகைப்படங்களை மாற்றிப் பதிவிட்ட 50 வயது பெண்ணை, 27 வயது இளைஞர் காதலித்ததாக கூறப்படுகிறது. இருவரும் நேரில் சந்தித்தபோது உண்மை தெரியவந்ததால் இளைஞர் அதிர்ச்சியடைந்தார்.
ஏஐ புகைப்படங்களால் ஏற்பட்ட பழக்கம்
கொரோனா காலத்தில் கணவரை இழந்த ஊர்மிளா தேவி, தனது இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணமாகி தனியாக வசித்து வந்துள்ளார். 50 வயதான அவர், சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் இளமையான தோற்றத்தில் மாற்றி பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்தப் புகைப்படங்களை பார்த்த 27 வயது இளைஞர் ஒருவர், அவரை இளம்பெண் என நினைத்து காதல் கொண்டுள்ளார்.
சமூக வலைத்தள அரட்டையில் வளர்ந்த காதல்
முதலில் சமூக வலைத்தள அரட்டையில் இருவருக்கும் பேச்சு தொடங்கியது. நாளடைவில் தொலைபேசியிலும் தொடர்ந்து பேசி வந்ததாக தெரிகிறது. இந்த நெருக்கம் அதிகரித்த நிலையில், ஊர்மிளாவை நேரில் சந்திக்க இளைஞர் விரும்பியுள்ளார். இதையடுத்து இருவரும் ஒரு பூங்காவில் சந்திக்க முடிவு செய்தனர்.
நேரில் பார்த்ததும் இளைஞருக்கு அதிர்ச்சி
திட்டமிட்டபடி பூங்காவுக்கு சென்ற இளைஞர், அங்கு ஊர்மிளாவை நேரில் பார்த்ததும் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. புகைப்படங்களில் இளமையாக தெரிந்தவருக்கு பதிலாக 50 வயது பெண் நேரில் நிற்பதை பார்த்த அவர், செய்வதறியாமல் திகைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து அவசரமாக வெளியேறியதாக கூறப்படுகிறது.
கணவரை இழந்த பிறகு ஒரு பெண் தனது வாழ்க்கையை புதிதாக தொடங்குவதில் எந்தத் தவறும் இல்லை. அதே நேரத்தில், சமூக வலைத்தளங்களில் ஏஐ மூலம் மாற்றப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தும்போது அதன் விளைவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஆன்லைன் பழக்கங்களில் உண்மையான அடையாளம் மற்றும் தகவல்களை மறைப்பது எதிர்பாராத பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: தினமும் கத்தி அழுவேன்! பாத்ரூம் போகக் கூட முடியல... அவ்வளவு டார்ச்சல்! ₹70,000 அரசு வங்கி வேலையை தூக்கி போட்டு இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு!!!