×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய 19 வயது ஐடிஐ மாணவருக்கு நடந்த அதிர்ச்சி! காற்றில் பறந்து வந்த எமன்... அடுத்த நொடியே பறிபோன உயிர்! கதறும் பெற்றோர்...!!!

கர்நாடகாவின் பெலகாவியில் தேர்வு முடிந்து இருசக்கர வாகனத்தில் சென்ற 19 வயது ஐடிஐ மாணவரின் கழுத்தில் மாஞ்சா நூல் சிக்கி உயிரிழந்தார்.

Advertisement

கர்நாடக மாநிலம் பெலகாவியில், இருசக்கர வாகனத்தில் சென்ற 19 வயது ஐடிஐ மாணவர் மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி உயிரிழந்தார். காந்தி நகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் நேற்று இந்த துயரச் சம்பவம் நடந்தது. தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பிய மாணவர், எதிர்பாராத வகையில் பறந்து வந்த ஆபத்தான நூலுக்கு பலியாகியுள்ளார்.

கழுத்தில் சிக்கிய மாஞ்சா நூல்

பெலகாவி மகாந்தேஷ் நகரைச் சேர்ந்த துருவா சந்தோஷ் கர்ஜாகி (19), ஐடிஐ படித்து வந்தார். நேற்று கல்லூரியில் தேர்வு எழுதிய அவர், பின்னர் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார். காந்தி நகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் அவரது கழுத்தில் சிக்கியது.

இதையும் படிங்க: குடும்பத்தை காவுவாகும் கள்ளக்காதல்..! வீட்டிற்குள் கழுத்தறுக்கப்பட்ட கிடந்த பெண்! அம்பலமான அதிர்ச்சி உண்மை... பரிதவிக்கும் 3 பிஞ்சுகள்!!!!

கண்ணாடித் துகள்கள் பூசப்பட்டிருந்த அந்த நூல், கழுத்தில் ஆழமான வெட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. இதனால் பலத்த ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில், துருவா சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மாஞ்சா நூல் விற்பனைக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை

மாணவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஆபத்தான மாஞ்சா நூல் விற்பனை குறித்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தடை செய்யப்பட்ட இந்த நூல்களை விற்பனை செய்யும் கடைகள் மீது பெலகாவி வடக்கு போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மாஞ்சா நூல் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: வயல்வெளியில் 26 வயது பெண் கொடூர கொலை! தாய் இறந்தது கூட அறியாமல்.... தாயின் உடல் மீது படுத்து அம்மா எந்திரிம்மா... கதறும் குழந்தை! நெஞ்சை உலுக்கும் சோகம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#பெலகாவி மாஞ்சா நூல் #Belagavi News #ஐடிஐ மாணவர் #மாஞ்சா கயிறு விபத்து #Karnataka crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story