×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முதலிரவு அறையில் மாப்பிளையிடம் மணமகள் சொன்ன அந்த அதிர்ச்சி உண்மை..... இறுதியில் இரவோடு இரவாக நடந்த பெரிய ட்விஸ்ட்..!!!

உத்தரப்பிரதேசத்தில் திருமணமான முதலிரவிலேயே காதலனுடன் வாழ விரும்புவதாக மணமகள் தெரிவித்ததைத் தொடர்ந்து, அசம்பாவிதத்தை தவிர்க்க மணமகன் எடுத்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமணமான முதலிரவிலேயே மணமகள் தனது காதல் குறித்து வெளிப்படையாக தெரிவித்ததைத் தொடர்ந்து, மணமகன் எடுத்த முடிவு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பாராத இந்த திருப்பம் தற்போது சமூக வலைத்தளங்களிலும் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

முதலிரவிலேயே வெளிப்பட்ட காதல் உண்மை

ஹாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், மீரட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த ஜூன் 25, 2026 அன்று உறவினர்கள் முன்னிலையில் விமரிசையாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு முதலிரவு அறையில் மணமகளுடன் பேசியபோது, தனக்கு ஏற்கனவே வேறொருவருடன் காதல் இருப்பதாகவும், அவருடன்தான் வாழ விரும்புவதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கணவனின் நண்பனுடன் மனைவிக்கு கள்ளக்காதல்! ஊரே கூடி சமரச பேச்சு... செருப்பால் அடித்த தாய்! ஆனால் கள்ளக்காதலனை மணந்த பெண்! 4 பிள்ளைகளில் இப்போ 2 போதும்.... கண்ணீரில் கணவன்...!!!

மணமகள் விடுத்த மிரட்டல்

தன்னை காதலனுடன் சேர்த்து வைக்காவிட்டால் தற்கொலை செய்து கொண்டு அதன் பழியை மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சுமத்திவிடுவேன் என்று மணமகள் மிரட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன், எந்தவித அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என்ற எண்ணத்தில் அடுத்தகட்ட முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

காதலனை வரவழைத்த மணமகன்

இதையடுத்து, மணமகன் இரவோடு இரவாக மணமகளின் காதலனை தொடர்புகொண்டு வரவழைத்து, தனது மனைவியை அவருடன் அனுப்பிவைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டின் 'ஹம் தில் தே சுகே சனம்' திரைப்படத்தை நினைவூட்டும் வகையில் நடந்ததாக கூறப்படும் இந்த நிகழ்வு, அப்பகுதியில் பரபரப்பையும் சமூக வலைத்தளங்களில் தீவிர விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: முதலிரவு அறையில் மணமகள் ஆடைகளை களைந்தபோது மாப்பிள்ளை கண்ட அதிர்ச்சி! என்ன செய்வது என்று தெரியாமல் கதறி அழுத கொடூரம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar pradesh #bride #groom #Love Affair #Viral News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story