கணவனின் நண்பனுடன் மனைவிக்கு கள்ளக்காதல்! ஊரே கூடி சமரச பேச்சு... செருப்பால் அடித்த தாய்! ஆனால் கள்ளக்காதலனை மணந்த பெண்! 4 பிள்ளைகளில் இப்போ 2 போதும்.... கண்ணீரில் கணவன்...!!!
பீகாரில் மனைவியின் விருப்பத்தை ஏற்று, காதலனுடன் கணவரே திருமணம் செய்து வைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் கணவர் ஒருவர், தனது மனைவியை அவரது காதலனுடன் பஞ்சாயத்து மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களிலும் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
பகுவாரா பட்டி கிராமத்தைச் சேர்ந்த அனூப் ராம் என்பவருக்கும் ஜோதி தேவி என்பவருக்கும் கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். தொழில் காரணமாக குடும்பத்துடன் மேற்கு வங்க மாநிலம் ஆசன்சோலில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
நண்பருடன் ஏற்பட்ட காதல்
இந்த நிலையில், அனூப் ராமின் நண்பரான சுஜித் தாஸுடன் ஜோதி தேவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சுஜித் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றதால், இந்த விவகாரம் குடும்பத்தினருக்கும் கிராம மக்களுக்கும் தெரியவந்தது.
இதையடுத்து, கடந்த மூன்று நாட்களாக கிராமத்தில் தொடர்ந்து பஞ்சாயத்து நடத்தப்பட்டது. ஜோதி தேவியிடம் குடும்பத்தினர் மற்றும் கிராம மூத்தவர்கள் பலமுறை சமரசம் பேச முயன்றனர். ஆனால், கணவருடன் வாழ விருப்பமில்லை என்றும், சுஜித்துடன் தான் வாழ்வேன் என்றும் அவர் உறுதியாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கோவிலில் நடந்த திருமணம்
இதன் பின்னர், பஞ்சாயத்து மற்றும் இரு குடும்பங்களின் சம்மதத்துடன், வெள்ளிக்கிழமை அன்று கிராம கோவிலில் ஜோதி தேவிக்கும் அவரது காதலன் சுஜித் தாஸ்-க்கும் முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
திருமண நிகழ்ச்சியின் போது, ஜோதியின் தாய் கோபத்தில் தனது மகளையும், புதிய மருமகனையும் செருப்பால் அடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கோவில் வளாகத்தில் சில நிமிடங்கள் பதற்றமான சூழல் நிலவியது.
குழந்தைகள் தந்தையிடமே ஒப்படைப்பு
திருமணத்திற்குப் பிறகு, தனது 4 குழந்தைகளில் இரண்டு குழந்தைகளை தன்னுடன் அழைத்துச் செல்ல ஜோதி விருப்பம் தெரிவித்தார். ஆனால், அதற்கு பஞ்சாயத்தாரும் அனூப் ராமின் குடும்பத்தினரும் சம்மதிக்கவில்லை.
இதனால், 4 குழந்தைகளும் தந்தை அனூப் ராமிடமே ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் ஜோதி தேவி தனது புதிய கணவருடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்த விவகாரம் குறித்து முன்னாள் ஊராட்சித் தலைவர் மனோஜ் குமார் சிங் பேசுகையில், “கடந்த மூன்று நாட்களாக சமரச முயற்சி நடைபெற்றது. ஆனால் பெண் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், அனைவரின் முன்னிலையிலும் திருமணம் நடத்தப்பட்டது” என்றார்.
ஒரு திரைப்படக் கதையை நினைவூட்டும் இந்த பீகார் சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.