×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

7 மாத கர்ப்பிணிக்கு திடீரென வந்த பிரசவ வலி.. ஒரே இரவில் மாறிய தலைவிதி! 4 குழந்தைகள்... மருத்துவமனையில் நடந்த அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்களால் கதறும் குடும்பம்!!!

உத்தரப் பிரதேசத்தில் ஏழு மாதக் கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை மூலம் நான்கு குழந்தைகள் பிறந்தன. இதில் ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், மூச்சுத்திணறலால் தாயும் உயிரிழந்தார்.

Advertisement

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தில் ஏழு மாதக் கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை மூலம் நான்கு குழந்தைகள் பிறந்த நிலையில், தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு பெண் குழந்தை பிறந்ததும் உயிரிழந்தது. மற்ற மூன்று குழந்தைகளும் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளன.

அறுவை சிகிச்சையில் பிறந்த நான்கு குழந்தைகள்

புதௌன் மாவட்டம் கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த அவருக்கு செவ்வாய்க்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: அடிஆத்தி... 3 நாட்களில் மட்டும் 30 நாகப்பாம்புகள்! வீட்டைத் தரையை தோண்டியபோது உடைந்த 8 ஆண்டு நீடித்த மர்மம்..! அதிரவைக்கும் சம்பவம்..!!!

அங்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டதில் நான்கு குழந்தைகள் பிறந்தன. அவற்றில் ஒரு பெண் குழந்தை பிறந்தவுடனேயே உயிரிழந்தது. மற்ற மூன்று பச்சிளம் குழந்தைகளும் அரசு மகளிர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மூச்சுத்திணறலால் தாயின் உடல்நிலை பாதிப்பு

பிரசவம் முடிந்து சில மணி நேரங்களிலேயே ஏக்தாவுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக பரேலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்கவில்லை. புதன்கிழமை ஏக்தா உயிரிழந்தார். ஏற்கெனவே ஒருமுறை கருச்சிதைவை எதிர்கொண்டிருந்த அவர், தற்போது நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த நிலையில் உயிரிழந்தது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தாயை இழந்த மூன்று பச்சிளம் குழந்தைகளின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்! நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மகளுக்கு தந்தை செய்த கொடூரம்! துடிதுடித்த தாய்.... பகீர் பின்னணி.!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#உத்தரப் பிரதேசம் #நான்கு குழந்தைகள் பிறப்பு #Quadruplets #தாய் உயிரிழப்பு #Budaun News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story