எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்! நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மகளுக்கு தந்தை செய்த கொடூரம்! துடிதுடித்த தாய்.... பகீர் பின்னணி.!!!
உத்தரப் பிரதேசத்தின் மைன்புரியில் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 19 வயது மகளைத் தந்தை துப்பாக்கியால் சுட்டதாகப் புகார் எழுந்துள்ளது. காயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தில், காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை தனது 19 வயது மகளைத் துப்பாக்கியால் சுட்டதாகப் புகார் எழுந்துள்ளது. போங்காவ் பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஷாசியா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரது தந்தை ஆசின் கானைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை ஏற்க மறுத்த மகள்
கூலித் தொழிலாளியான ஆசின் கான், தனது மகள் ஷாசியாவுக்கு வேறொரு நபருடன் நவம்பர் 19ஆம் தேதி திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தான் காதலித்த நபரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் ஷாசியா உறுதியாக இருந்துள்ளார். இதனால் தந்தைக்கும் மகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: நள்ளிரவில் நீண்ட நேரம் ஆகியும் அறையை திறக்காத 24 வயது எம்பிபிஎஸ் மாணவி! கதவை உடைத்த போது காத்திருந்த அதிர்ச்சி... பகீர் சம்பவம்!!!
நள்ளிரவில் துப்பாக்கியால் சுட்டதாகப் புகார்
நள்ளிரவில் ஷாசியா தூங்கிக்கொண்டிருந்தபோது, அவரது தந்தை தலையில் துப்பாக்கியால் சுட்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அவரது தாய் கேருனிஷா, பலத்த காயமடைந்த மகளை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். பின்னர், அவர் சைஃபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தந்தை கைது; போலீசார் விசாரணை
கேருனிஷா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். தலைமறைவாக முயன்ற ஆசின் கானை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமண விவகாரத்தில் ஏற்பட்ட தகராறே துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமா, சம்பவத்தின் பின்னணியில் வேறு காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தனித்தனி மரங்களில் தொங்கிய காதலர்கள்..! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மை..!!!