அடிஆத்தி... 3 நாட்களில் மட்டும் 30 நாகப்பாம்புகள்! வீட்டைத் தரையை தோண்டியபோது உடைந்த 8 ஆண்டு நீடித்த மர்மம்..! அதிரவைக்கும் சம்பவம்..!!!
உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் கிராமத்தில் ஒரே வீட்டிலிருந்து மூன்று நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நாகப்பாம்புகள் வெளியேறின. தரையைத் தோண்டியபோது 100-க்கும் மேற்பட்ட முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டம் கஹர்கா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து தொடர்ந்து நாகப்பாம்புகள் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த குடும்பத்தினர் தரையைத் தோண்டிப் பார்த்தபோது, அங்கு 100-க்கும் மேற்பட்ட பாம்பு முட்டைகள் இருந்தது தெரியவந்துள்ளது.
மூன்று நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நாகப்பாம்புகள்
கஹர்கா கிராமத்தில் உள்ள அந்த வீட்டில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நாகப்பாம்புகள் தென்பட்டுள்ளன. இதனால் வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர் அச்சமடைந்தனர். பாம்பு பிடிக்கும் நிபுணர்களை வரவழைத்து, வீட்டிலிருந்து வெளியே வந்த பாம்புகளைப் பிடித்து வனப்பகுதியில் விடுவித்துள்ளனர்.
இதையும் படிங்க: எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்! நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மகளுக்கு தந்தை செய்த கொடூரம்! துடிதுடித்த தாய்.... பகீர் பின்னணி.!!!
ஆனாலும் பாம்புகள் தொடர்ந்து வெளியே வந்ததால் குடும்பத்தினரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இதையடுத்து கிராம மக்களின் உதவியுடன் வீட்டின் தரைப்பகுதியைத் தோண்டிப் பார்க்க முடிவு செய்தனர்.
தரைக்கு அடியில் 100-க்கும் மேற்பட்ட முட்டைகள்
தரையைத் தோண்டியபோது, அதற்குக் கீழே ஏராளமான பாம்பு முட்டைகள் இருப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அங்கு 100-க்கும் மேற்பட்ட முட்டைகள் இருந்தது. அவற்றிலிருந்து குஞ்சுகள் வெளியேறியதால்தான் வீட்டுக்குள் தொடர்ந்து பாம்புகள் வந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பாம்பு முட்டைகளைப் பாதுகாப்பாகக் கைப்பற்றினர். இதனால் வீட்டில் பாம்புகள் தொடர்ந்து தென்பட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
எட்டு ஆண்டுகளாக வீட்டில் பாம்புகள் நடமாட்டம்
இதுகுறித்து பேசிய கிராமத்தைச் சேர்ந்த கபில் தியாகி, கடந்த எட்டு ஆண்டுகளாகவே தங்களது வீட்டில் அவ்வப்போது பாம்புகள் தென்பட்டு வந்ததாகக் கூறியுள்ளார். ஆரம்பத்தில் பாம்புகளைப் பிடித்து வீட்டுக்கு வெளியே விட்டுவந்ததால், பெரிதாக அச்சப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் கடந்த ஒரு வாரமாகப் பாம்புகள் தொடர்ந்து வெளியே வரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக மூன்று நாட்களில் 30-க்கும் மேற்பட்ட பாம்புகள் தென்பட்டதால் குடும்பத்தினர் அச்சத்தில் இருந்ததாக அவர் கூறியுள்ளார். தற்போது முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் கஹர்கா கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நள்ளிரவில் நீண்ட நேரம் ஆகியும் அறையை திறக்காத 24 வயது எம்பிபிஎஸ் மாணவி! கதவை உடைத்த போது காத்திருந்த அதிர்ச்சி... பகீர் சம்பவம்!!!