×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடிப்பாவி! வீட்டின் அருகே விளையாடிய 3 வயது சிறுமி திடீர் மாயம்! பக்கத்து வீட்டு பெண் செய்த மாய மாந்திரீகம்... கொடூரமாக கொன்று சாக்குபையில் கட்டிய பயங்கரம்! வெளிவந்த பகீர் பின்னணி...!!!

உத்தரப் பிரதேசத்தில் 3 வயது சிறுமியை பக்கத்து வீட்டுப் பெண் மாந்திரீக சடங்கிற்காகக் கொலை செய்து சாக்குப்பையில் மறைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில், வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்கத்து வீட்டில் வசித்த பெண், மாந்திரீக சடங்கிற்காக குழந்தையைக் கொலை செய்துள்ளார். மாயமான சிறுமியைத் தேடிய போலீசார், அருகிலுள்ள வீட்டில் சாக்குப்பைக்குள் இருந்த அவரது உடலை மீட்டனர்.

வீட்டின் அருகே விளையாடிய சிறுமி திடீர் மாயம்

புலந்த்ஷஹர் மாவட்டத்தின் பூத் பகுதியில் வசிக்கும் 3 வயது சிறுமி வானியா, சனிக்கிழமை காலை சுமார் 11 மணியளவில் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென குழந்தை காணாமல் போனதால், குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் பல இடங்களில் தேடினர். நீண்ட நேரமாகியும் சிறுமி கிடைக்காததால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: விளையாடிகொண்டிருந்த 3 வயது குழந்தை திடீர் மாயம்! பக்கத்து வீட்டு வாடகை அறையில் காத்திருந்த பேரதிர்ச்சி.. வெளியான பகீர் பின்னணி..!!!

இதையடுத்து, போலீசார் பல தனிப்படைகளை அமைத்து விசாரணையைத் தொடங்கினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அவர்கள், சிறுமி வீட்டை விட்டு வெகுதூரம் செல்லவில்லை என்பதை கண்டறிந்து அருகிலுள்ள வீடுகளில் சோதனை நடத்தினர்.

சாக்குப்பைக்குள் சடலமாக மீட்பு

சிறுமியின் உடையை முகர்ந்து பார்த்த மோப்ப நாய், அருகிலிருந்த ஒரு வீட்டிற்குள் சென்றது. அங்கு போலீசார் சோதனை செய்தபோது, சாக்குப்பைக்குள் சிறுமி வானியாவின் உடல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தையின் வாயில் துணி திணிக்கப்பட்டிருந்ததாகவும், கையில் கூர்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்ட காயம் இருந்ததாகவும் காவல் நிலைய அதிகாரி சுமித் குமார் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.

மாந்திரீக சடங்கிற்காக கொலை செய்ததாக சந்தேகம்

முதற்கட்ட விசாரணையில், குழந்தையின் உடல் மீட்கப்பட்ட வீட்டில் வசித்த பெண் மாந்திரீகச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். நரபலி போன்ற மாந்திரீக சடங்கிற்காக சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தினேஷ் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் உடலைக் கண்ட குடும்பத்தினர் கதறி அழுததுடன், சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். பிடிபட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தக் கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா, கொலைக்கான பின்னணி என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த 3 குழந்தைகள்...! அதுவும் ஒரே அறிகுறியால் நடந்த அதிர்ச்சி... கதறி துடிக்கும் பெற்றோர்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#உத்தரப் பிரதேசம் #3 வயது சிறுமி கொலை #Bulandshahr Murder #மாந்திரீக சடங்கு #UP Crime News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story