விளையாடிகொண்டிருந்த 3 வயது குழந்தை திடீர் மாயம்! பக்கத்து வீட்டு வாடகை அறையில் காத்திருந்த பேரதிர்ச்சி.. வெளியான பகீர் பின்னணி..!!!
உத்தரப் பிரதேசம் புலந்த்ஷஹரில் மாயமான 3 வயது சிறுமி பக்கத்து வீட்டு அறையில் சடலமாக மீட்கப்பட்டார். மாந்திரீகச் சடங்கு சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹரில் மாயமான 3 வயது பெண் குழந்தை, பக்கத்து வீட்டில் உள்ள வாடகை அறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாந்திரீகச் சடங்குக்காக குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புலந்த்ஷஹர் பகுதியில் வசிக்கும் சிறுமி, நேற்று காலை சுமார் 11 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். இதனால் பதற்றமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடத் தொடங்கினர்.
இதையும் படிங்க: ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த 3 குழந்தைகள்...! அதுவும் ஒரே அறிகுறியால் நடந்த அதிர்ச்சி... கதறி துடிக்கும் பெற்றோர்..!!!
பக்கத்து வீட்டு அறையில் சடலமாக மீட்பு
குழந்தையைத் தேடிய நிலையில், இரவு நேரத்தில் அதே பகுதியில் வாடகை அறையில் வசித்து வந்த சோனாலி என்ற பெண்ணின் அறையில் சிறுமி சடலமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கிடைத்த முதற்கட்ட தடயங்கள் மற்றும் சூழ்நிலைகளை வைத்து, மாந்திரீகச் சடங்கு தொடர்பாக குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
குழந்தையின் வாயை மூடி மூச்சுத் திணறடித்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும், கொலைக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
டெல்லி சாலையை மறித்து பொதுமக்கள் போராட்டம்
பக்கத்து வீட்டில் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட தகவல் பரவியதும், ஆத்திரமடைந்த உறவினர்களும் பொதுமக்களும் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கோரி டெல்லி சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பதற்றமான சூழலும் ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், குழந்தையின் மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, சம்பவத்தின் பின்னணி மற்றும் சந்தேக நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.