1000 இல்ல 2000 இல்லங்க ஒவ்வொருவருக்கும் 1 கோடி பண மாலை..! 100 அடி நீளமுள்ள 500 ரூபாய் நோட்டால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட மாலை...! திருமண ஊர்வலத்தில் மைத்துனர் கொடுத்த பரிசை பார்த்து மிரண்டு போன ஊர் மக்கள்..!!!
உத்தரப் பிரதேசம் மதுராவில் இரு மணமகன்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 100 அடி பண மாலைகளை மைத்துனர் பரிசளித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் நடைபெற்ற திருமண ஊர்வலத்தில், இரு மணமகன்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பண மாலைகள் அணிவிக்கப்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 100 அடி நீளமுள்ள இந்த மாலைகளை பலர் சேர்ந்து தூக்கிப் பிடித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நக்லா ஃபௌடா கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில், பிரஷாந்த் மற்றும் கன்ஹா ராகவ் ஆகிய இரு மணமகன்களுக்கும் அவர்களது மைத்துனர் யோகேஷ் குமார் தாக்கூர் இந்த பிரம்மாண்ட பரிசை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: விளையாடிகொண்டிருந்த 3 வயது குழந்தை திடீர் மாயம்! பக்கத்து வீட்டு வாடகை அறையில் காத்திருந்த பேரதிர்ச்சி.. வெளியான பகீர் பின்னணி..!!!
தலா ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பண மாலைகள்
ராஜஸ்தான் மாநிலம் காமன் பகுதியிலுள்ள நந்தோலா கிராமத்தின் தலைவராக இருக்கும் யோகேஷ் குமார் தாக்கூர், இரு மணமகன்களுக்கும் 500 ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட மாலைகளை அணிவித்துள்ளார். ஒவ்வொரு மாலையும் சுமார் 100 அடி நீளம் கொண்டதாக இருந்ததால், அதன் எடையைத் தாங்க பலர் ஒன்றாகச் சேர்ந்து பிடித்தனர்.
இரண்டு மாலைகளின் மொத்த மதிப்பு 2 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட மணமகன்கள் மொட்டை மாடியில் அமர்ந்திருந்த காட்சியை உறவினர்களும் அங்கிருந்தவர்களும் செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்தனர்.
திருமண ஊர்வலத்தில் கவனம் ஈர்த்த பிரம்மாண்ட பரிசு
பளிங்கு மற்றும் கல் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் மணமகன்கள் இருவரும் விவசாயத் தலைவர் மகாவீர் சுவாமியின் மருமகன்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவர்தனில் உள்ள திருமண மண்டபத்துக்குச் செல்வதற்கு முன்பாக நடைபெற்ற குதிரை ஊர்வலத்தில் இந்த பண மாலைகள் வழங்கப்பட்டுள்ளன.
திருமண விழாவில் வழங்கப்பட்ட இந்த பிரம்மாண்ட பரிசு, மதுரா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பேசுபொருளாகியுள்ளது. 100 அடி நீளமுள்ள பண மாலைகளுடன் மணமகன்கள் இருந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இணையவாசிகள் பலரும் இந்த பரிசைப் பார்த்து ஆச்சரியத்துடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.