கோயில் தரிசனம் முடிந்து வீடு திரும்பிய குடும்பத்துக்கு நேர்ந்த விபரீதம்! லாரி மீது கார் மோதியதில் குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாப பலி...! பெரும் சோகம்..!!!
ராஜஸ்தானில் கோட்டா-உதய்பூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது வாகனம் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். கோட்டா-உதய்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஷம்புபுரா அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பயணிகள் வாகனம் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோயில் தரிசனம் முடித்து திரும்பிய குடும்பத்தினர்
மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர், ராஜஸ்தானில் உள்ள காட்டு ஷ்யாம்ஜி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கோட்டா-உதய்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஷம்புபுரா அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது அவர்கள் பயணித்த வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதையும் படிங்க: பட்ட பகலில் கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! பபகீர் வீடியோ ..!!!
மோதிய வேகத்தில் வாகனம் கடுமையாக சேதமடைந்ததால், அதில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்தனர். குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
6 பேர் படுகாயம்; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உள்ளூர் மக்களின் உதவியுடன் வாகனத்தில் சிக்கியிருந்த காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கோட்டாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 6 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாகனத்தை ஓட்டியவர் கண் அயர்ந்து தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.