×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Zipline சவாரி : இளைஞரின் சட்டையை பிடித்து இளம்பெண் செய்த காரியம்.. துடிதுடித்து உயிரிழநத 24 வயது இளைஞர்..!

சிப்லைன் சவாரியில் நடந்த துயரம்..! பணியில் சேர்ந்த மறுநாளே 24 வயது இளைஞர் உயிரிழப்பு..!

Advertisement

கேரளாவின் காசர்கோடு பகுதியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் சிப்லைன் ஆபரேட்டராக பணியில் சேர்ந்த மறுநாளே 24 வயது இளைஞர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனூப் கருஷ்ணன் என்ற இளைஞர், சிப்லைன் சவாரியின்போது ஏற்பட்ட எதிர்பாராத சம்பவத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கயிறு :

காசர்கோடு பகுதியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் சிப்லைன் ஆபரேட்டராக சனூப் கருஷ்ணன் பணியில் சேர்ந்துள்ளார்.
அவர் பணியில் சேர்ந்த மறுநாளே இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. ஒரு பெண்ணை சிப்லைனில் அழைத்துச் சென்றபோது, அவர் உரிய பாதுகாப்பு கயிறை அணியாமல் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: இணை பிரியாத தம்பதிகளாக நேர்ந்த சோகம்.. கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் மரணம்.! 

எதிர்பாராத சம்பவம் :

சிப்லைன் சவாரியின்போது அந்தப் பெண் பயந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் சனூப்பின் சட்டையை பிடித்து இழுத்துள்ளார். இதனால் நிலைதடுமாறிய சனூப் கீழே விழுந்து உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

பாதுகாப்பின் அவசியம் :

சிப்லைன் போன்ற சாகச பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக பயன்படுத்தப்படுவது மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக, ஆபரேட்டர் மற்றும் சவாரி செய்பவர் இருவருக்கும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட வேண்டிய சூழல் இதுபோன்ற சம்பவத்தின் மூலம் வெளிப்படுகிறது.

இதையும் படிங்க: 9 பேரை காவு வாங்கிய கள்ளச்சாராயம்? மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#KERALA #Kasargod #Zipline #Accident Safety
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story