×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இணை பிரியாத தம்பதிகளாக நேர்ந்த சோகம்.. கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் மரணம்.! 

கணவர் இறந்த சோகத்தில் இருந்த பெண் உயிரிழந்தார். 

Advertisement

தன்னுடன் அன்பாக இருந்த கணவர் உயிரிழந்த சோகத்தில் இருந்த மனைவியும் உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தம்பதி: 

கேரளா மாநிலத்தில் உள்ள பாலா, புத்தன்பள்ளி வாழையிலை பகுதியில் வசித்து வருபவர் குரியன் ஜோசப் (வயது 74). இவர் வியாபாரி ஆவார். கேரளா காங்கிரஸ் வழிநடத்தல் குழுவில் உறுப்பினராகவும் இருக்கிறார். இவரின் மனைவி ஷெர்லி (வயது 71). 

இதையும் படிங்க: உங்க பொண்ணை பாருங்க... வீடியோ காலில் மாமனார், மாமியார்கு அந்த காட்சியை காட்டிய கொடூரம்! அடுத்து அந்த வார்த்தையை சொல்லிவிட்டு போனை கட் செய்த கணவன்! அடுத்து நடந்த பயங்கரம்.!!!

மரணம்: 

கடந்த ஆகஸ்ட் 15 ம் தேதி வயது மூப்பு காரணமாக குரியன் இயற்கை எய்தினார். இதனால் ஷெர்லி மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், கணவரை நினைத்து வருந்தி இருக்கிறார். 

சடங்கு: 

இதனிடையே, நேற்று குரியனின் இல்லத்தில் வைத்து சடங்குகள் நடைபெற்றுள்ளன. பின் அவரின் உடலை தேவாலயம் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கின. அப்போது, ஷெர்லி தனது கணவருக்கு இறுதி முத்தம் கொடுக்க குனிந்த நிலையில், அவர் பின் எழுந்திருக்கவில்லை. 

மரணம்: 

இதனை கவனித்த உறவினர்கள் அவரை தூக்க முற்பட்டபோது, அவர் அசைவில்லாமல் இருப்பதை உறுதி செய்தனர். பின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரின் மரணமும் உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை அறிந்த தம்பதிகளின் 3 மகள்களும் கலங்கிப்போயினர். தம்பதிகளின் இறுதிச்சடங்கு ஒரே நேரம் & இடத்தில் நடக்க குடும்பத்தினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர். 

இதையும் படிங்க: கணவரை கொன்று புதைத்து பலே நாடகம்.. 2 ஆண்டுகளுக்குப்பின் கள்ளக்காதலனுடன் சிக்கிய பெண்.. பரபரப்பு தகவல்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#KERALA #Husband Wife #Trending
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story