×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உங்க பொண்ணை பாருங்க... வீடியோ காலில் மாமனார், மாமியார்கு அந்த காட்சியை காட்டிய கொடூரம்! அடுத்து அந்த வார்த்தையை சொல்லிவிட்டு போனை கட் செய்த கணவன்! அடுத்து நடந்த பயங்கரம்.!!!

கர்நாடகாவின் கேசகோடு அருகே மனைவியை கொலை செய்ததாக உறவினர்களுக்கு வீடியோ கால் மூலம் தெரிவித்த கணவர், பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவியின் உடலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

கர்நாடக மாநிலத்தின் கேசகோடு கிராமத்தில் குடும்பத் தகராறு விபரீதமாக முடிந்துள்ளது. மனைவியைக் கொலை செய்ததாக மாமனார், மாமியார்கு வீடியோ கால் மூலம் தெரிவித்ததாக கூறப்படும் ரகு, பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மனைவியின் உடலை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

காரில் ஏற்பட்ட தகராறு விபரீதம்

கேசகோடு கிராமத்தைச் சேர்ந்த 41 வயதான ரகு, சொந்தமாக பேக்கரி நடத்தி வந்தார். அவரது மனைவி காகனா (38). இவர்களுக்கு 12 மற்றும் 6 வயதுடைய இரண்டு மகன்கள் உள்ளனர். தொழில் காரணமாக ரகு சில காலமாக வேறு பகுதியில் தங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் இருந்து வந்துள்ளது. சம்பவம் நடந்த நாளில் காரில் சொந்த ஊருக்குச் செல்லும் வழியிலும் தகராறு ஏற்பட்டதாகவும், ஆத்திரத்தில் ரகு மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சமாதானமாக பேசி அம்மா வீட்டில் இருந்த மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்த கணவன்! இரவு கொடூரமாக தாக்கி... தூக்கில் தொங்கவிட்டு மாமனார், மாமியாருக்கு போட்ட வீடியோ கால்! பகீர் சம்பவம்!!!

உறவினர்களுக்கு வீடியோ கால்

தகவலின்படி, நடந்ததை தனது செல்போனில் பதிவு செய்த ரகு, வீட்டுக்குச் சென்றதும் மாமனார் மற்றும் மாமியாருக்கு வீடியோ கால் செய்துள்ளார். அப்போது, “உங்கள் மகளை கொலை செய்து விட்டேன்” என்று கூறியதுடன், சம்பவம் தொடர்பான காட்சியையும் அவர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. பின்னர் தானும் உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக தெரிவித்து அழைப்பை துண்டித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீவிர தேடுதலில் போலீசார்

இதையடுத்து, கிராமத்தில் உள்ள மரம் ஒன்றில் ரகு தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் அவரது உடலை போலீசார் மீட்டனர். அதேசமயம், காகனாவின் உடலை அருகிலுள்ள கால்வாயில் வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது. வழக்குப் பதிவு செய்த போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதையும் படிங்க: எல்லாத்துக்கும் அவன் தான் காரணம்! அவனை சும்மா விடாதீங்க.... இன்ஸ்டா மூலம் முடிந்துப்போன ஈரோடு பெண்ணின் கடைசி நிமிடங்கள்! பகீர் சம்பவம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Karnataka crime #கேசகோடு #Husband Wife #police investigation #Suicide case
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story