நல்லது செஞ்ச பொண்ணுக்கு இப்படி ஒரு பேரா..? தேம்பி தேம்பி அழுது வீடியோ வெளியிட்ட இந்திய பெண்..!!!
இந்திய சமூக வலைதளப் பிரபலம் ஷிவானி குமாரி மீது அமெரிக்க யூடியூபர் மார்வின் ஆச்சி குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு ஷிவானி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.
சமூக வலைதளப் பிரபலம் ஷிவானி குமாரிக்கும், அமெரிக்க யூடியூபரும் ஃபிட்னஸ் பயிற்சியாளருமான மார்வின் ஆச்சிக்கும் இடையே புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இந்தியாவில் தங்கியிருந்தபோது தன்னை அவமானப்படுத்தியதாக மார்வின் குற்றம்சாட்டியுள்ளார். இதற்குப் பதிலளித்து ஷிவானி குமாரி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளதால், இந்த விவகாரம் இணையத்தில் விவாதமாகியுள்ளது.
ஷிவானி மீது மார்வின் வைத்த குற்றச்சாட்டு
இந்தியாவுக்கு வந்திருந்த மார்வின் ஆச்சி, ஷிவானியின் வீட்டில் விருந்தினராகத் தங்கியிருந்தார். பின்னர் அமெரிக்கா திரும்பிய அவர், அங்கிருந்து வெளியிட்ட வீடியோவில் ஷிவானி தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறியுள்ளார். உள்ளூர் திருவிழா ஒன்றின்போது தனது முகத்தில் கரி பூசியதாகவும், தனது மனைவி மீது மணல் வீசியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சமூக வலைதளங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகத் தங்களைக் கேலிப் பொருளாக்கி அவமானப்படுத்தியதாகவும் மார்வின் தெரிவித்துள்ளார். இந்தியாவின் விருந்தோம்பல் மரபான 'அதிதி தேவோ பவ' என்ற பண்பாட்டுக்கு இது எதிரானது என்றும் அவர் தனது வீடியோவில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பயங்கர விபத்து! சாலையில் ஆறாக ஓடிய கடுகு எண்ணெய்..! ஆபத்தான நேரத்தில் உதவாமல் மக்கள் செய்த காரியத்தை பாருங்க... வைரல் வீடியோ!!!
கண்ணீர் மல்க பதிலளித்த ஷிவானி குமாரி
மார்வினின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஷிவானி குமாரி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மார்வினையும் அவரது மனைவியையும் தனது வீட்டில் 15 நாட்கள் தங்க வைத்து, சொந்தப் பணத்தைச் செலவழித்து அன்புடன் கவனித்ததாகக் கூறியுள்ளார்.
தங்களுக்குள் ஏதேனும் வருத்தம் அல்லது பிரச்சினை இருந்திருந்தால் நேரடியாகத் தன்னிடம் கேட்டிருக்கலாம் என்றும், அமெரிக்கா திரும்பிய பிறகு பொதுவெளியில் வீடியோ வெளியிட்டு குற்றம்சாட்டுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பணம் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்காகத் தன்னைப் பற்றி இவ்வாறு பேசுவது வேதனை அளிப்பதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
திருவிழா கலாச்சாரம் குறித்து ஆதரவாளர்கள் விளக்கம்
திருவிழாவில் முகத்தில் கரி பூசுவது கிராமப்புறக் கலாச்சாரக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதிதான் என்றும், யாரையும் அவமானப்படுத்தும் நோக்கம் அதில் இல்லை என்றும் ஷிவானியின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். மார்வினின் குற்றச்சாட்டுகளுக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இரு தரப்பினரும் தங்களது கருத்துகளை வீடியோ மூலம் வெளியிட்டுள்ள நிலையில், யார் கூறுவது சரி என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் தொடர்ந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பின் விளக்கங்களும் வெளியாகியுள்ள நிலையில், சர்ச்சை மேலும் கவனம் பெற்றுள்ளது.