×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பயங்கர விபத்து! சாலையில் ஆறாக ஓடிய கடுகு எண்ணெய்..! ஆபத்தான நேரத்தில் உதவாமல் மக்கள் செய்த காரியத்தை பாருங்க... வைரல் வீடியோ!!!

கான்பூர் நெடுஞ்சாலையில் லாரி மோதியதில் கடுகு எண்ணெய் டேங்கர் சேதமடைந்து எண்ணெய் சாலையில் கொட்டியது. அதை மக்கள் பாத்திரங்களில் அள்ளிச் சென்ற காட்சி வைரலானது.

Advertisement

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த லாரி, கடுகு எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது மோதியது. மோதலின் தாக்கத்தில் டேங்கரின் ஒரு பகுதி சேதமடைந்து, அதிலிருந்த ஆயிரக்கணக்கான லிட்டர் எண்ணெய் சாலையில் கொட்டியது. இதையடுத்து அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

சாலையில் ஆறாக ஓடிய கடுகு எண்ணெய்

தகவலின்படி, நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த டேங்கர் மீது பின்னால் வேகமாக வந்த லாரி பலமாக மோதியுள்ளது. இதனால் டேங்கரில் உடைப்பு ஏற்பட்டு, அதில் இருந்த கடுகு எண்ணெய் சாலையின் பெரும் பகுதியில் பரவியது. விபத்தால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அது என் மகன் தான்..! அவனது உடலை கொடுங்க! ஆனால்.. மறுத்த போலீஸ் அதிகாரிகள்! 15 மாத போராட்டதுக்கு பிறகு வெளிவந்த DNA டெஸ்ட் உண்மை...! இறுதியில் அந்த தந்தை செய்த அதிர்ச்சி காரியம்..!!!

பாத்திரங்களுடன் திரண்ட மக்கள்

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, சாலையில் எண்ணெய் கொட்டுவதை பார்த்த சிலர் வீடுகளில் இருந்து வாலி, பாத்திரம், பிளாஸ்டிக் கேன் உள்ளிட்டவற்றை எடுத்து வந்தனர். அதன்பின் சாலையில் தேங்கிய எண்ணெயை போட்டி போட்டு அள்ளிச் சென்றனர். வழியாக வந்த சில வாகன ஓட்டிகளும் வாகனங்களை நிறுத்திவிட்டு எண்ணெயை சேகரித்ததாக கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனம்

அங்கு இருந்தவர்கள் இந்தக் காட்சிகளை செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். வீடியோ வேகமாக பரவிய நிலையில், விபத்து நடந்த ஆபத்தான சூழலில் மீட்பு உதவிக்கு முன்னுரிமை கொடுக்காமல் எண்ணெயை எடுத்துச் சென்றவர்களின் செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: அடிப்பாவி! எத்துன்ன பேரு? இன்ஸ்டா காதல்.. இரண்டரை ஆண்டுக்கு பின் தெரியவந்த ரகசியம்! 9 குழந்தைகள், 4 காதலர்கள்.. அடுக்கடுக்காக வெளியே வந்த மர்ம உறவு! பகீர் சம்பவம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கான்பூர் சாலை விபத்து #Mustard Oil Tanker #உத்தரப் பிரதேசம் #Kanpur Highway Accident #வைரல் வீடியோ
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story