×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடிப்பாவி! எத்துன்ன பேரு? இன்ஸ்டா காதல்.. இரண்டரை ஆண்டுக்கு பின் தெரியவந்த ரகசியம்! 9 குழந்தைகள், 4 காதலர்கள்.. அடுக்கடுக்காக வெளியே வந்த மர்ம உறவு! பகீர் சம்பவம்..!!!

இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து திருமணம் செய்த நரேந்திர், மனைவியின் ரகசியங்கள் வெளிச்சத்துக்கு வந்ததால் தாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சி

Advertisement

உத்தரப் பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் தொடங்கிய காதல், திருமணத்துக்குப் பிறகு கடும் மோதலாக மாறியுள்ளது. மெயின்புரியைச் சேர்ந்த 37 வயது நரேந்திரும் சோனியா யாதவும் சமூக வலைதளம் வழியாக அறிமுகமாகி திருமணம் செய்துகொண்டனர். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மனைவியின் கடந்தகாலம் மற்றும் தனிப்பட்ட உறவுகள் குறித்து நரேந்திருக்கு தெரியவந்த நிலையில், இருவருக்கும் இடையே பிரச்சினை வெடித்தது.

இன்ஸ்டாகிராம் காதல்... இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு தெரியவந்த ரகசியம்

நரேந்திரும் சோனியாவும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகத் தொடங்கியுள்ளனர். சுமார் 8 நாட்கள் மட்டுமே பேசிய நிலையில் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

இதையும் படிங்க: 12 அடி நீள மலைப்பாம்பு வெறும் 6 நிமிஷத்தில்.... 20 கிலோ எடையுள்ள நீலகாய் கன்றை விழுங்கியது! கண்முன்னே நடந்ததை பார்த்து அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!!

இந்த நிலையில், சோனியாவுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்றிருந்ததும், முதல் கணவர் மூலம் 3 குழந்தைகளும், இரண்டாவது கணவர் முன்னா யாதவ் மூலம் 6 குழந்தைகளும் என மொத்தம் 9 குழந்தைகள் இருப்பதும் நரேந்திருக்கு சமீபத்தில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. மேலும், கடந்த ஜூலை மாதம் உடல்நலக் குறைவு எனக் கூறி கௌரிகாட்டில் சோனியா இறக்கிவிடப்பட்டதாகவும், பின்னர் பல்வேறு காரணங்களைக் கூறி நரேந்திரிடம் சுமார் ரூ.40,000 வரை கடன் பெற்றதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போனில் தெரிந்த மற்றொரு உறவு... 5 மாத கர்ப்பம்

கடந்த செப்டம்பர் 25-ம் தேதி சோனியாவை நேரில் சந்தித்த நரேந்திர், அவரது செல்போனை சோதித்ததாக கூறப்படுகிறது. அப்போது மற்றொரு நபருடன் சோனியா தொடர்பில் இருப்பது தெரியவந்ததுடன், அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த நரேந்திருக்கும் சோனியாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் நரேந்திர் சோனியாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த சோனியா, தனது நான்காவது காதலன் என கூறப்படும் நபருடன் சேர்ந்து நரேந்திரை சிறைபிடித்ததாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாதி மொட்டை... செருப்பு மாலை அணிவித்து அவமானம்

செப்டம்பர் 27-ம் தேதி ஹர்டோய் மாவட்டம் கங்க்பூர் கிராமத்தில் நரேந்திரை அந்த நபர்கள் கொடூரமாக அவமானப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரது தலையில் பாதியை மட்டும் மொட்டை அடித்ததுடன், பாதி மீசையையும் சவரம் செய்துள்ளனர். பின்னர் கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து பொதுமக்கள் முன்னிலையில் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

நரேந்திர் அழுது கெஞ்சியபோதும் அவரை விடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த சிலர் உதவுவதற்குப் பதிலாக செல்போனில் காட்சிகளை பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய பின்னரே போலீசாரின் கவனத்துக்கு சம்பவம் சென்றதாக கூறப்படுகிறது.

புகாரின் பேரில் போலீஸ் விசாரணை தீவிரம்

நரேந்திர் அளித்த புகாரின் அடிப்படையில் ஹர்பால்பூர் சர்க்கிள் அதிகாரி பிரவீண் குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் தொடர்பான பிரச்சினையும் சோனியாவின் மற்றொரு உறவு குறித்த தகவலும் மோதலுக்கான முக்கிய காரணங்களாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

நரேந்திரை கட்டிப்போட்டு அவமானப்படுத்தியதாக கூறப்படும் நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தாக்குதல் மற்றும் அவமானப்படுத்தலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

இதையும் படிங்க: அதிர்ச்சி! வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த முன்னாள் ராணுவ வீரரும் அவரது மனைவியும்..! 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை.. பகீர் சம்பவம்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#உத்தரப் பிரதேசம் #instagram love #நரேந்திர் #சோனியா யாதவ் #Harapalpur Police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story