×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அது என் மகன் தான்..! அவனது உடலை கொடுங்க! ஆனால்.. மறுத்த போலீஸ் அதிகாரிகள்! 15 மாத போராட்டதுக்கு பிறகு வெளிவந்த DNA டெஸ்ட் உண்மை...! இறுதியில் அந்த தந்தை செய்த அதிர்ச்சி காரியம்..!!!

உத்தரப் பிரதேசத்தில் 15 மாதங்களுக்கு முன் மாயமான 12 வயது சிறுவனின் உடல் அடையாளம் மறுக்கப்பட்ட நிலையில், டிஎன்ஏ பரிசோதனை உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

Advertisement

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் 15 மாதங்களுக்கு முன்பு மாயமான 12 வயது சிறுவன் ரஜத்தின் மரணம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. காக்ரா நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட உடல் தனது மகனுடையது என தந்தை அப்போதே கூறியிருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்காத அதிகாரிகள் வேறு ஒருவரின் உடல் எனக் கூறி அவசரமாக தகனம் செய்தனர்.

மகன் என அடையாளம் காட்டிய தந்தை

பல்லியா மாவட்டத்தைச் சேர்ந்த அகிலேஷ் மிஸ்ராவின் 12 வயது மகன் ரஜத் திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காத நிலையில், சில நாட்களுக்குப் பிறகு காக்ரா நதிக்கரையில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அங்கு சென்ற அகிலேஷ், அது தனது மகன் ரஜத்தினுடைய உடல்தான் என அடையாளம் காட்டினார்.

இதையும் படிங்க: அடிப்பாவி! எத்துன்ன பேரு? இன்ஸ்டா காதல்.. இரண்டரை ஆண்டுக்கு பின் தெரியவந்த ரகசியம்! 9 குழந்தைகள், 4 காதலர்கள்.. அடுக்கடுக்காக வெளியே வந்த மர்ம உறவு! பகீர் சம்பவம்..!!!

ஆனால், காவல்துறை அவரது அடையாளத்தை ஏற்கவில்லை. உடலுக்கு உரிமை கோர யாரும் வரவில்லை எனக் கூறி, அதிகாரிகளே இறுதிச்சடங்குகளை மேற்கொண்டனர். மகனின் உடலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், மரபணு பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் அகிலேஷ் தொடர்ந்து வலியுறுத்தினார்.

15 மாத போராட்டத்துக்கு கிடைத்த பதில்

மகனின் நிலை குறித்து உண்மையை அறிய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அகிலேஷ் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சென்று முறையிட்டார். உடலின் அடையாளத்தை உறுதி செய்ய DNA பரிசோதனை நடத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்தார். நீண்ட கால போராட்டத்துக்குப் பிறகு அவரது கோரிக்கை ஏற்கப்பட்டது.

மரபணு பரிசோதனை முடிவில், 15 மாதங்களுக்கு முன்பு தகனம் செய்யப்பட்ட உடல் உண்மையில் ரஜத்தினுடையதுதான் என்பது உறுதியானது. இதன் மூலம், தொடக்கத்திலேயே அந்த உடல் தனது மகனுடையது என அகிலேஷ் கூறியிருந்தது உண்மை என்பது தெரியவந்தது.

துணியால் பொம்மை செய்து இறுதிச்சடங்கு

மகனின் உடலை இறுதியாகப் பார்க்கவும், முறைப்படி இறுதிச்சடங்கு செய்யவும் முடியாமல் போன நிலையில், அகிலேஷ் துணிகளால் ஒரு பொம்மையை உருவாக்கினார். அதனை தனது மகனாகக் கருதி இறுதிச்சடங்குகளை செய்தார். 15 மாதங்களாக நீடித்த தேடலுக்கும் போராட்டத்துக்கும் பின்னர், மகனின் உண்மை நிலை தெரியவந்தாலும், அவரை நேரில் வழியனுப்ப முடியாத தந்தையின் நிலை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: 12 அடி நீள மலைப்பாம்பு வெறும் 6 நிமிஷத்தில்.... 20 கிலோ எடையுள்ள நீலகாய் கன்றை விழுங்கியது! கண்முன்னே நடந்ததை பார்த்து அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#உத்தரப் பிரதேசம் #ரஜத் மரணம் #DNA Test #அகிலேஷ் மிஸ்ரா #காக்ரா நதி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story