ஐயோ... கடவுளே! திடீரென காணாமல் போன மனைவி! 3 மாதமாக தேடி திரிந்த கணவன்... சாலையோரம் இருந்த மனைவியின் கோலத்தை பார்த்து கதறிய கணவன்..! கண்கலங்க வைக்கும் காட்சி..!!!
இந்தியாவில் 3 மாதங்களாக காணாமல் போன மனைவியை ஃபேஸ்புக் வீடியோ மூலம் கணவர் கண்டுபிடித்த நெகிழ்ச்சி சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் வீட்டை விட்டு வெளியேறிய பெண் ஒருவர், தான் யார் என்பதையே மறந்த நிலையில் சாலையோரத்தில் உணவுக்காக யாசித்துக் கொண்டிருந்தார். 3 மாதங்களாக மனைவியைத் தேடி வந்த அவரது கணவருக்கு, ஃபேஸ்புக்கில் வெளியான ஒரு வீடியோ எதிர்பாராத தகவலை கொடுத்தது. வீடியோவை பார்த்த அடுத்த சில நிமிடங்களில் மனைவியைத் தேடி அவர் ஓடிச்சென்றார்.
சாலையோரத்தில் தவித்த பெண்
வழிதவறி வேறு ஒரு கிராமத்துக்குச் சென்ற அந்தப் பெண், தனது பெயர், வீடு உள்ளிட்ட எந்த விவரங்களையும் நினைவுகூர முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சாலையோரத்தில் அமர்ந்து உணவுக்காக யாசித்துக் கொண்டிருந்த அவரை ‘ரபியுல்’ என்ற உள்ளடக்க உருவாக்குநர் கவனித்துள்ளார்.
பெண்ணின் நிலையை அறிந்த அவர், அதை வீடியோவாக பதிவு செய்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அந்தக் காணொலி பின்னர் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதற்கிடையே, வீடியோ எதிர்பாராத வகையில் அந்தப் பெண்ணின் கணவரின் பார்வையிலும் பட்டது.
3 மாத தேடலுக்கு கிடைத்த பதில்
வீடியோவில் இருந்த பெண் தனது மனைவிதான் என்பதை அறிந்த கணவர், தாமதிக்காமல் அவர் இருந்த இடத்துக்குச் சென்றார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நேரில் பார்த்தபோதும், தன்னைப் பற்றிய பல நினைவுகளை இழந்திருந்த அந்தப் பெண், கணவரை மட்டும் உடனடியாக அடையாளம் கண்டுகொண்டதாக கூறப்படுகிறது.
மனைவியைக் கண்டதும் கணவர் குழந்தையைப் போல கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. அவரது அழுகையைப் பார்த்த சிலர், அவர் தனது தாயை சந்தித்திருக்கலாம் என்றே முதலில் நினைத்ததாக கூறப்படுகிறது.
கைவிடாத தேடல்; இணைந்த தம்பதி
மூன்று மாதங்களாக மனைவியைத் தேடி வந்த கணவர், அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் கிடைக்கும் வரை தனது முயற்சியை கைவிடவில்லை. இறுதியில் ஒரு சமூக வலைதள வீடியோ மூலம் மனைவியை மீண்டும் கண்டுபிடித்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.