கொடூர தாக்குதல்! ஆடைகளை கிழித்து நிர்வாணமாக்கி... நடுரோட்டில் வாலிபரை தடி, கட்டைகளால் அடித்து அராஜகம் செய்த கும்பல்! சுருண்டு கீழே விழுந்து... அதிர்ச்சி வீடியோ....!!!
உத்தரப் பிரதேசம் மீரட்டில் மதுபானக் கடை அருகே இளைஞரை நடுரோட்டில் இழுத்துச் சென்று தாக்கிய 2 பேரை லிசாரி கேட் போலீசார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் மதுபானக் கடை அருகே இளைஞர் ஒருவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நூர் நகர் ஹால்ட் பகுதியில் நடந்த தாக்குதலில், அந்த இளைஞரை நடுரோட்டிற்கு இழுத்து வந்த கும்பல், ஆடைகளை கிழித்து தடி மற்றும் கட்டைகளால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
மது அருந்தியபோது ஏற்பட்ட வாக்குவாதம்
லிசாரி கேட் காவல் எல்லைக்குட்பட்ட நூர் நகர் ஹால்ட் பகுதியில் உள்ள மதுபானக் கடை அருகே இளைஞர் ஒருவர் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சில நபர்களுடன் அவருக்கு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேரம் செல்லச் செல்ல வாக்குவாதம் முற்றிய நிலையில், போதையில் இருந்ததாக கூறப்படும் சிலர் அந்த இளைஞரை வலுக்கட்டாயமாக சாலைக்கு இழுத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: சாவிலும் பிரியாத உண்மை காதல்! உயிருடன் மண்ணில் புதைக்கப்படும் காதலர்கள்...? வைரலான வீடியோவால் இறுதியில் அம்பலமான அதிர்ச்சி உண்மை..!!!
நடுரோட்டில் நடந்த கொடூர தாக்குதல்
சாலையில் வைத்து அந்த இளைஞரின் ஆடைகளை கிழித்து அரை நிர்வாணமாக்கிய கும்பல், தடி மற்றும் கட்டைகளால் அவரை தொடர்ந்து தாக்கியதாக தெரிகிறது. வலி தாங்க முடியாமல் அவர் அலறியபடி துடித்த காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளன. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த கொடூர தாக்குதல் காட்சிகள் இணையத்தில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வைரல் வீடியோவால் போலீஸ் நடவடிக்கை
தாக்குதல் முடிந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து லிசாரி கேட் போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதலில் தொடர்புடையதாக கூறப்படும் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.