திடீர் திடீரென தெருநாய்க்கு வந்த வெறி! வெறும் 30 நிமிஷத்துல 6 பேரை கடித்த கொடூரம்! வீதி வீதியாக வேட்டையாடிய வெறிநாய்... அதிர்ச்சி காட்சி!!!
ஹரியானா ரோத்தக்கில் தெருநாய் அடுத்தடுத்து 5 முதல் 6 பேரை கடித்துக் காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஹரியானா மாநிலம் ரோத்தக்கில் தெருநாய் ஒன்று அடுத்தடுத்து பொதுமக்களைத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓல்ட் ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் சாலையில் சென்ற பெண் ஒருவரை நாய் கடுமையாகக் கடித்தது. தொடர்ந்து அரை மணி நேரத்துக்குள் மேலும் 5 முதல் 6 பேர் தாக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சாலையில் சென்ற பெண்ணை திடீரெனத் தாக்கிய நாய்
ரோத்தக் ஓல்ட் ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் பெண் ஒருவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் அமைதியாக அமர்ந்திருந்த தெருநாய் தாக்குதல் நடத்தியது. திடீரென அந்தப் பெண் மீது பாய்ந்த நாய், அவரது காலைக் கடித்துக் குதறியது.
வலியால் அவர் அலறியதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு திரண்டனர். நாயை விரட்டிய அவர்கள், காயமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
30 நிமிடத்தில் 5 முதல் 6 பேருக்கு கடி
நாய் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து சாலையில் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து பொதுமக்களை விரட்டிச் சென்று கடித்ததாகவும், சுமார் 30 நிமிட இடைவெளியில் மேலும் 5 முதல் 6 பேர் பாதிக்கப்பட்டதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அமைதியாக அமர்ந்திருந்த நாய் திடீரென பாய்ந்து சென்று தாக்கும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. Rohtak CCTV காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
தொடர் நாய் தாக்குதலால் காலனி மக்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் வெளியே செல்லும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
https://youtube.com/watch?v=Yj1n9LxLRfY%3Fautoplay%3D1%26mute%3D1
ஆபத்தை ஏற்படுத்தும் தெருநாய்களை அடையாளம் கண்டு உடனடியாக கட்டுப்படுத்துவதுடன், காலனி பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கையையும் குறைக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.