பெத்து வளர்த்த 2 புள்ளையும் இப்போ இல்லையே...! 4 வயது தங்கையை காப்பாற்ற சென்ற அக்கா...! நொடிப்பொழுதில் நடந்த அதிர்ச்சி...! கதறும் குடும்பத்தினர்...!!!
தெலுங்கானா முலுகு மாவட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமியை காப்பாற்ற முயன்ற 18 வயது அக்காவும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் விடுமுறை நாளில் விவசாயத் தோட்டத்துக்கு சென்ற இரு சகோதரிகள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர். 4 வயது தங்கை தவறி கிணற்றில் விழுந்த நிலையில், அவரைக் காப்பாற்ற குதித்த 18 வயது அக்காவும் நீரில் சிக்கினார். இருவருக்கும் நீச்சல் தெரியாததால், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிணற்றை பார்க்கச் சென்ற சகோதரிகள்
விடுமுறை தினமான நேற்று, முலுகு மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை தனது இரண்டு மகள்களையும் விவசாயத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். பெற்றோர் சற்று தொலைவில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த ரஹீம் கிணற்றைப் பார்க்க 4 வயதான எம்.டி. ஆசியாவும், அவரது 18 வயது அக்கா எம்.டி. சம்யுக்கும் சென்றுள்ளனர்.
தங்கையை காப்பாற்ற கிணற்றில் குதித்த அக்கா
கிணற்றின் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ஆசியா தவறி உள்ளே விழுந்துள்ளார். இதைப் பார்த்த சம்யுக், தங்கையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உடனடியாக கிணற்றுக்குள் குதித்துள்ளார். ஆனால், இருவருக்கும் நீந்தத் தெரியாததால் நீரில் இருந்து வெளியே வர முடியவில்லை.
இதனால் சிறிது நேரத்திலேயே இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், இரு சிறுமிகளின் உடல்களையும் மீட்டனர்.
அரசு மருத்துவமனைக்கு உடல்கள் அனுப்பிவைப்பு
மீட்கப்பட்ட இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக முலுகு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: என்கிட்டயே உன் வேலையை காட்டுறீயா...! சீறிய பாம்பை கடித்து குதறிய கீரி....! திகில் வீடியோ..!!!