×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அந்தரங்க வீடியோ மிரட்டல்.... விபத்து போல் பெண் போட்ட பலே நாடகம்! 40 நாட்களுக்குப் பின் அம்பலமான அதிர்ச்சி பின்னணி!!!

உத்தரப் பிரதேசத்தில் லாரி ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 40 நாட்களுக்குப் பிறகு திடுக்கிடும் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெண் கைது.

Advertisement

உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் லாரி ஓட்டுநர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 40 நாட்களுக்குப் பிறகு திடுக்கிடும் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திருமணத்தை மீறிய உறவை முறித்துக்கொள்ள முயன்ற பெண், ஓட்டுநரை கொலை செய்து லாரியை தீக்கிரையாக்கியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அமன்தீப் கவுரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உறவை முறிக்க முயன்ற பெண்ணுக்கு மிரட்டல்

பிலாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த திருமணமான அமன்தீப் கவுருக்கும், லாரி ஓட்டுநரான பல்விந்தர் சிங்கிற்கும் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, அந்த உறவை முடித்துக்கொள்ள அமன்தீப் முடிவு செய்துள்ளார். ஆனால், பல்விந்தர் சிங் அதற்கு சம்மதிக்கவில்லை.

இதையும் படிங்க: உல்லாச வாழ்க்கைக்கு இடையூறு.. கணவர், 4 வயது மகன் கொலை.. இளம்பெண்ணின் அதிர்ச்சி செயல்.! 

மேலும், தங்களது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அமன்தீப்பின் குடும்பத்தினரிடம் காட்டிவிடுவதாக அவர் தொடர்ந்து மிரட்டியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த அமன்தீப், தனது ரகசியம் வெளியே தெரியாமல் இருக்க பல்விந்தரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

லாரியில் தூங்கிய ஓட்டுநர் கொலை

திட்டமிட்டபடி கடந்த ஜூலை 10-ம் தேதி குன்னா பாபா குருத்வார் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரிக்குள் பல்விந்தர் சிங் தூங்கிக் கொண்டிருந்தபோது அமன்தீப் சென்றுள்ளார். அப்போது இரும்புக் கம்பியால் அவரை தாக்கி கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் கொலையை மறைத்து விபத்து போல நாடகம் ஆடுவதற்காக லாரியின் மீது டீசல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.

40 நாட்களுக்குப் பிறகு அம்பலமான கொலை

லாரி தீப்பிடித்த நிலையில் கிடைத்ததால், ஆரம்பத்தில் போலீசார் இதனை விபத்து என்ற கோணத்தில் விசாரித்தனர். ஆனால் பல்விந்தர் சிங்கின் சகோதரர் குர்மீத் சிங் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து கிடைத்த தகவல்கள் மற்றும் விசாரணையின் அடிப்படையில், இது விபத்து அல்ல என்றும் திட்டமிட்டு நடத்தப்பட்ட லாரி ஓட்டுநர் கொலை என்றும் போலீசார் கண்டறிந்தனர். திருமணத்தை மீறிய உறவு, அதுதொடர்பான மிரட்டல் ஆகியவை கொலைக்கான காரணமாக இருந்தது விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. சுமார் 40 நாட்களுக்குப் பிறகு வழக்கின் பின்னணி வெளிச்சத்துக்கு வந்த நிலையில், அமன்தீப் கவுர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

இதையும் படிங்க: கையில் கிளவுஸ்சுடன் பள்ளி முதல்வர் வீட்டுக்குள் புகுந்து... 10 ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த பயங்கரம்! திடுக்கிடும் பின்னணி...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ராம்பூர் கொலை #Rampur Murder #லாரி ஓட்டுநர் கொலை #Amandeep Kaur #உத்தரப் பிரதேச குற்றம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story