உல்லாச வாழ்க்கைக்கு இடையூறு.. கணவர், 4 வயது மகன் கொலை.. இளம்பெண்ணின் அதிர்ச்சி செயல்.!
Bangalore News: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர், மகன் கொலை செய்யப்பட்டனர்.
கள்ளக்காதல் உல்லாச வாழ்க்கைக்கு தடையாக இருந்த கணவரை பெண் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
தம்பதி:
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், சிக்ப்னாவாரா பகுதியில் வசித்து வருபவர் அபிநந்தன் (வயது 34). இவர் தனியார் நிறுவன ஊழியர் ஆவார். இவரின் மனைவி ஹரிணி. தம்பதிகளுக்கு யதுவீர் என்ற 4 வயதுடைய மகன் இருக்கிறார்.
இதையும் படிங்க: கணவரை கொன்று புதைத்து பலே நாடகம்.. 2 ஆண்டுகளுக்குப்பின் கள்ளக்காதலனுடன் சிக்கிய பெண்.. பரபரப்பு தகவல்.!
சோசியல் மீடியா:
இதனிடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக சமூக வலைத்தளம் மூலம் ஹரிணிக்கு, வினய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னாளில் இது கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இந்த விவகாரம் அபிநந்தனுக்கு ஒருகட்டத்தில் தெரியவரவே, கணவன் - மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
திட்டம்:
இதனால் கணவர் உயிரோடு இருந்தால் கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவிக்க முடியாது என நினைத்த ஹரிணி - வினய், அபிநந்தனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இவர்களின் திட்டப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நேரத்தில் வினய் அபிநந்தன் வீட்டுக்கு வந்து, கள்ளக்காதலி உதவியுடன் அபிநந்தனை சுவற்றில் முட்டவைத்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தார்.
மகனும் கொலை:
அச்சமயம், சத்தம் கேட்டு எழுந்த 4 வயது மகனையும் முகத்தில் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்தனர். பின் வீட்டில் இருந்த ரத்தக்கறையை சுத்தம் செய்துள்ளனர். பின் மறுநாள் கணவர் - மகன் மர்மமாக மரணம் அடைந்ததாக உறவினர்களிடம் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணை:
பிரேத பரிசோதனையில் இருவரும் கொல்லப்பட்டது உறுதியாகவே, ஹரிணியிடம் விசாரித்தபோது உண்மை அம்பலமானது. இதனையடுத்து, இருவரையும் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.