கையில் கிளவுஸ்சுடன் பள்ளி முதல்வர் வீட்டுக்குள் புகுந்து... 10 ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த பயங்கரம்! திடுக்கிடும் பின்னணி...!!!
தெலுங்கானாவில் பள்ளி முதல்வர் ரூபாரெட்டி வீட்டுக்குள் புகுந்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 10-ம் வகுப்பு மாணவர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தெலுங்கானா மாநிலம் கொண்டமலேபள்ளியில் உள்ள நாகார்ஜுனா தனியார் பள்ளியின் முதல்வர் ரூபாரெட்டி, அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் இப்ராஹிம்பட்டணம் அருகே 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் அதே பள்ளியில் படிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவர் என்பதும், மற்ற இருவர் முன்னாள் மாணவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிளவுஸ் அணிந்து வீட்டுக்குள் புகுந்த கும்பல்
ரூபாரெட்டி வீட்டுக்குள் புகுந்த கொலையாளிகள், தடயங்கள் மற்றும் கைரேகைகள் சிக்காமல் இருக்க கைகளில் கிளவுஸ் அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். வீட்டில் இருந்த பணத்தை குறிவைத்து அவர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது.
80-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை
கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், அதில் பதிவான தகவல்களின் அடிப்படையில் 80-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கிடைத்த தடயங்களை வைத்து விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், பள்ளி மாணவர் உள்ளிட்ட 3 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.4 லட்சம் பணத்திற்காக கொலையா?
ரூபாரெட்டியின் வீட்டில் இருந்ததாக கூறப்படும் ரூ.4 லட்சம் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. அதே நேரத்தில், பணத்துக்காக மட்டும் கொலை செய்யப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் மற்றும் பழிவாங்கும் காரணம் உள்ளதா என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். பள்ளி மாணவர் இந்த கொலைக்கு எப்படி தொடர்புடையவர், முன்னாள் மாணவர்களின் பங்கு என்ன என்பது குறித்தும் விசாரணை தீவிரமாக நடக்கிறது.