குஷியோ குஷி... ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம்...! முதல்வரின் திடீர் சர்ப்ரைஸ்...!!!
புதுச்சேரியில் சிவப்பு, மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிலுவையில் இருந்த 6 மாத அரிசி நிதியுதவி வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை நிறத்துக்கு ஏற்ப ரூ.5,160, ரூ.2,580 எனத் தொகை செலுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய 6 மாத அரிசி நிதியுதவி ஒரே தவணையாக வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு ரூ.5,160-ம், மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு ரூ.2,580-ம் செலுத்தப்பட்டுள்ளது. நிலுவையில் இருந்த தொகை கிடைத்துள்ளதால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிவப்பு, மஞ்சள் அட்டைதாரர்களுக்கு எவ்வளவு தொகை?
புதுச்சேரியில் இலவச அரிசி திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகள் மூலம் அரிசி வழங்குவதற்குப் பதிலாக அதற்கான பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த 6 மாதங்களுக்கான நிலுவைத் தொகை தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வா ஒன்னா சாகலாம்! ஓடும் ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி! கதறும் 2 குழந்தைகள்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!!
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.860 வீதம், 6 மாதங்களுக்கான மொத்தத் தொகையான ரூ.5,160 செலுத்தப்பட்டுள்ளது. மஞ்சள் நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.430 வீதம், மொத்தம் ரூ.2,580 வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு முன்பே மகளிர் உரிமைத் தொகையும் வழங்கல்
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இந்த நிதியுதவி பயனாளிகளுக்கு உதவியாக அமைந்துள்ளது. இதனுடன், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகையும் தீபாவளிக்கு முன்பாகவே வழங்கப்பட்டது.
ரேஷன் அரிசிக்கான நிலுவைத் தொகையும், மகளிர் உரிமைத் தொகையும் உரிய நேரத்தில் கிடைத்துள்ளதால் புதுச்சேரி பயனாளிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தற்கொலை முடிவை எடுத்து ஆற்றில் குதித்த பெண்...! முதலை செய்த செயலால் மனம் மாறி... பெண்ணே சொன்ன அந்த வார்த்தை! விசித்திர சம்பவம்...!!!