×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தற்கொலை முடிவை எடுத்து ஆற்றில் குதித்த பெண்...! முதலை செய்த செயலால் மனம் மாறி... பெண்ணே சொன்ன அந்த வார்த்தை! விசித்திர சம்பவம்...!!!

கர்நாடகாவின் உடுப்பியில் குடும்பத் தகராறால் ஆற்றில் குதித்த பெண்ணை முதலை கடித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு விரைந்த போலீசார், பொதுமக்கள் உதவியுடன் அவரை உயிருடன் மீட்டனர்.

Advertisement

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர், குடும்பத் தகராறு காரணமாக ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவரை முதலை ஒன்று கடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு விரைந்த போலீசாரும் பொதுமக்களும் இணைந்து பெண்ணை பத்திரமாக மீட்டனர்.

ஆற்றில் குதித்த பெண்ணை கடித்த முதலை

ரேகா என்ற அந்தப் பெண், கணவருடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையால் மனமுடைந்து ஆற்றில் குதித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த சிறிய முதலை ஒன்று அவரைக் கடித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ரேகா, 'காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...' எனக் கூச்சலிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரத்த வெள்ளத்தில் விவசாய நிலத்தில் கழுத்தறுக்கப்பட்டு கிடந்த சிறுமி.. ! கூட்டு சேர்ந்து காம மிருகங்ககள் செய்த கொடூர காரியம்.... பகீர் பின்னணி..!!!

விரைந்து வந்த போலீசார்; பொதுமக்கள் உதவியுடன் மீட்பு

பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக சுப்ரமண்யா போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரும் பொதுமக்களும் இணைந்து, முதலையின் பிடியில் இருந்த ரேகாவை மீட்டனர்.

லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்

தட்சிண கன்னடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் தெரிவித்த தகவலின்படி, முதலை சிறியதாக இருந்ததால் ரேகாவுக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. இதனால் அவர் உயிர் தப்பியுள்ளார். குடும்பத் தகராறால் ஆற்றில் குதித்த பெண், முதலை தாக்குதலிலும் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: அடக்கடவுளே... 7 வது மாடியிலிருந்து நொடிப்பொழுதில் தவறி கீழே விழுந்த 2 குழந்தைகளின் தாய்! காதலன் கண்முன்னே நடந்த பயங்கரம்.. ஷாக் வீடியோ..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கர்நாடகா பெண் #முதலை தாக்குதல் #உடுப்பி ஆற்றில் சம்பவம் #Crocodile Attack #Woman Rescue
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story